"டாஸ்மாக் சரவெடி.. ஒரே அறிவிப்பில் அப்ளாஸ் அள்ளும் தமிழக அரசு.. தீபாவளிக்கு போட்ட உத்தரவு.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கு திமுக அமைச்சரே உரிய பதிலையும் தந்துள்ளார்.

கடந்த வருடம், தீபாவளி பண்டிகைக்கு, டாஸ்மாக் விற்பனை இலக்கு வைக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.. ஆனால், அப்போது பொறுப்பிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த செய்திக்கு உடனடியாக மறுப்பு கூறியிருந்தார்.

Tasmac Special Announcement by tamil nadu government and what did minister Muthusamy say Diwali target

"அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் ஊடகங்கள் செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றும் செந்தில் பாலாஜி எச்சரித்திருந்தார்.

அண்ணாமலை காட்டம்:
செந்தில் பாலாஜி என்றதுமே, இதற்கு உடனடியாக வந்து பதிலடி தந்திருந்தார், சொந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..

"கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். டாஸ்மாக் விற்பனையில் தனக்கு கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்று பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கி, உண்மையான செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்?" என கேள்வி எழுப்யிருந்தார்.

தீபாவளி: இப்படி கடந்த வருடம் தீபாவளியின்போது பெரும் பரபரப்பை தந்திருந்தது டாஸ்மாக் விவகாரம்.. இந்நிலையில், இந்த வருடம் தீபாவளிக்கும் டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. இந்த கேள்வியை, அமைச்சர் முத்துசாமியிடமே செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அமைச்சர் முத்துசாமி, "தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை... மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு... டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் மதுக்கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

அதிருப்தி:
மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தில், திமுக அரசு மீது, தமிழக மக்களுக்கு பெருத்த கவலை ஏற்பட்டது.. ஆனால், அந்நிகழ்வுக்கு பிறகு, டாஸ்மாக் விவகாரத்தில், தமிழக அரசு முன்னெடுத்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது

குறிப்பாக, "குடி மற்றும் போதை பழக்க பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் முறையிலும், மனோதத்துவ முறையிலும், மருத்துவ முறை சிகிச்சையுடன் கூடிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும் என்று சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

நச் அறிவிப்பு: அது மட்டுமில்லாமல், போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு 15 நாட்கள் அவர்கள் பகுதியிலேயே தங்கி இருந்து சிகிச்சை வழங்கப்படும் என்றும் குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட பிறகு வேலைக்கான தகுதி இருந்தால், அரசு பணியில் கல்வி தகுதிக்கு ஏற்ப அவர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களுக்கு அரசு வேலை என்ற அறிவிப்பாகட்டும், முதல்முறையாக டாஸ்மாக் வரும் சிறிய வயதினருக்கு கவுன்சிலிங் தருவதான அறிவிப்பாகட்டும், டாஸ்மாக் பிரச்சனைகளை களைய தனிக்குழு நியமித்துள்ளதாகட்டும், மது விற்பனையை குறைக்க வேண்டும் என்ற இலக்காகட்டும், இவை அனைத்துமே மக்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.. அத்துடன், டாஸ்மாக் விவகாரத்தில், திமுக அரசு மீதான அதிருப்திகளும் மெல்ல உடைந்து கீழே விழுந்து வருகிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+