கும்பகோணம் புறநகர் சாலையில் முட்புதரில் 2 வயது பெண் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கும்பகோணத்தில் அசூர் புறவழிச் சாலையில் முட்புதரில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் அசூர் புறவழிச்சாலை அருகே முட்புதரில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையின் உடல் காயங்களுடன் ஒரு டவல் துண்டு மீது வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

2 years old girl babys body found in by pass road near Kumbakonam

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் புறவழிச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாலுக்கா காவல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் குழந்தையை யாரேனும் கொலை செய்து விட்டார்களா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+