நான் உன் அப்பா.. 12 வயசு சிறுமியை கையை பிடித்து இழுத்த விஷமி.. பொதுமக்கள் சரமாரி அடி உதை
12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்த முயன்றிருக்கிறார்.
Recommended Video

தஞ்சாவூர்: "நான்தான் உன் அப்பா, வா வீட்டுக்கு போலாம்" என்று 12 வயசு பெண்ணை கையை பிடித்து இழுத்து கடத்தி செல்ல முயன்றவரை பொதுமக்கள் வெளுத்து வாங்கிவிட்டனர்.
எப்பவுமே ரொம்ப பரபரப்பாக இருப்பது தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டேண்ட். அதனால இங்கு பயணிகள், பொதுமக்கள் என நெரிசல் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் பள்ளி முடிந்து மாணவிகள் பஸ் ஏறுவதற்காக பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறார்கள். எல்லோருமே ஒன்றாக பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு இளைஞர் அங்கு வந்தார். வரும்போதே செம போதையில் தள்ளாடிக் கொண்டு வந்தார். திடீரென அங்கும் இங்கும் பஸ் ஸ்டேண்டுக்குள்ளேயே ரவுண்டு அடித்தார்.

வா போகலாம்
பிறகு மாணவிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் வந்து நின்றார். அதில் 12 வயதான 7-ம் வகுப்ப மாணவி பக்கத்தில் நின்று கொண்டு, "நான்தான் உன் அப்பா, என் கூட, வீட்டுக்கு போகலாம்" என்று சொல்லி சிறுமியின் கையை பிடித்து இழுத்தார்.

காப்பாத்துங்க..
பிறகு பாலியல் சீண்டல் செய்து, கடத்தி செல்லவும் முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, "என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க" என்று அலறவும், பஸ் ஸ்டேண்டில் நின்றுகொண்டிருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்தனர்.

உளறினார்
கையை பிடித்து கொண்டிருந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து மாணவியை மீட்டனர். ஆனாலும் இளைஞர் தனியாக ஏதேதோ உளறிக்கொண்டே இருந்தார். பிறகு உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டது.

எச்சரித்தனர்
அதில், ஒரத்தநாடு அருகே நடுவூரைச் சேர்ந்த கார்த்தி என்பவர்தான் அந்த இளைஞர் என்பதும், அளவுக்கு அதிகமாக போதை தலைக்கேறியதால், இப்படி மாணவியிடம் நடந்து கொண்டதாகவும் தெரியவந்தது. புகார் எதுவும் இளைஞர் மேல்தரப்படாததால், போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications