ஆயிரம் கனவுகளின் விமானம்.. பெரியார் மணியம்மை கல்வி மையத்தில் நடந்த.. விண்வெளி நிகழ்ச்சி
தஞ்சாவூர்: பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, "ஆயிரம் கனவுகளின் விமானம்" என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்றும் ஆசியா புத்தக சாதனை முயற்சியாக வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வு, இளம் தலைமுறையினரிடையே விண்வெளி, புதுமை மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 27 பள்ளிகள் மற்றும் 2 பலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து 1932 மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இது கல்வி மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஆரா ஏரோஸ்பேஸ் குழுவினரால் தள ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் பங்கேற்பாளர்களின் பதிவு மற்றும் கைமுறையில் கிளைடர் (Glider) உருவாக்கும் பயிற்சி நடைபெற்றது. மாணவர்கள் குழுவாக இணைந்து தங்களது படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு மற்றும் குழுப்பணி திறன்களை வெளிப்படுத்தி கைமுறை கிளைடர்களை வடிவமைத்து தயாரித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டிரோன் விமானக் காட்சி நிகழ்ச்சி சிறப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா வெ.இராமச்சந்திரன் அவர்களின் வரவேற்புரை மூலம் தொடங்கியது. அவர் சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்று அறிமுகம் செய்தார். மாணவர்களின் பெரும் பங்கேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவையே வெற்றிக்கான வழிகாட்டிகள் என வலியுறுத்தினார்.
முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட திரு. டி. கே. சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற விஞ்ஞானி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பெங்களூரு, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று உரையாற்றினார். வாழ்க்கையை ரசித்தபடியே எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், அறிவை சேமிப்பது எதிர்காலத்திற்கான முதலீடு போன்றது என்றும் விளக்கினார். சந்திரனில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் பெருமையை எடுத்துரைத்த அவர், மாணவர்கள் ISRO வில் சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.
IIT திருப்பதி - தொழில்நுட்ப புதுமை மையம் (TIH)-இன் டாக்டர் அபிஜித் தேவானந்தம், நிறுவனம் புதுமை மற்றும் நடைமுறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அளிக்கும் ஆதரவினை பாராட்டினார். மாணவர்கள் தங்களுக்கென ட்ரோன்களை உருவாக்க வேண்டும் என்றும், புதுமையான யோசனைகளுடன் திட்டங்களை முன்னெடுக்க மாணவர்களுக்கு தொழில் முனைவோராக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
செயற்குழு உறுப்பினர் முனைவர் வீ. அன்புராஜ் கிளைடர் பறப்பைத் தொடங்கி வைத்தார். மேலும், 2019 ஏப்ரல் 21 அன்று PMIST-இல் 15 பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட "SKI NSLV மணியம்மையார் செயற்கைக்கோள்" மூலம் பெற்ற ஆசியா புத்தக சாதனையை நினைவுகூர்ந்தார். விண்வெளி பொறியாளர்களுக்கு வானமே எல்லை அல்ல என்றும், சரியான கட்டமைப்பு இருந்தால் எதையும் பறக்கச் செய்ய முடியும் என்றும் கூறி மாணவர்களை ஊக்குவித்தார். தொடர்ந்து, முதன்மை விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனத்தின் தீர்ப்பாளரான திரு. எஸ். சகாயராஜ், சாதனை அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கைமுறை கிளைடர்கள் பறக்கவிடப்பட்ட சாதனையாக, 1932 மாணவர்கள் 966 கிளைடர்களை பறக்கவிட்ட சாதனைக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாக அறிவித்தார். இந்த சாதனை, இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவத்தின், விண்வெளி பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ஐ. கார்த்திக் சுப்ரமணியன் அவர்களின் நன்றியுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆரா ஏரோஸ்பேஸ் மதுரை நிறுவனத்தால் FPV மற்றும் வேளாண் ட்ரோன் காட்சிகள், மேலும் RC ட்ரோன் பந்தயங்கள் நடத்தப்பட்டன.
"ஆயிரம் கனவுகளின் விமானம்" நிகழ்ச்சி, மாணவர்கள் பெரிய கனவுகளை காணவும், தைரியமாக புதுமைகளை முயற்சிக்கவும், விண்வெளித் துறையில் உள்ள பரந்த வாய்ப்புகளை ஆராயவும் ஊக்கமளித்தது. இந்நிகழ்வு, எதிர்கால பொறியாளர்கள் மற்றும் புதுமையாளர்களை உருவாக்கும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுனவத்தின், நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா பி.கே.ஸ்ரீவித்யா பேராசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications