சாப்பிட்டுவிட்டு செல்லுங்க... TTV மகள் திருமண வரவேற்பில் OPS தம்பிக்கு ராஜமரியாதை.. ருசிகர தகவல்..!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தனது இல்ல திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை புரிந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவை, இருந்து விருந்து சாப்பிடுமாறு டி.டி.வி.தினகரன் உபசரித்திருக்கிறார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சை மாவட்டம் பூண்டி துளசி ஐயா வாண்டையாரின் பேரன் ராமநாதனுக்கும் கடந்த மாதம் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று பூண்டியில் வரவேற்பு விழா நடந்தது.

அதில் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 முக்கியப் பிரமுகர்கள்

முக்கியப் பிரமுகர்கள்

தஞ்சை மாவட்டம் பூண்டியில் நேற்று நடைபெற்ற டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடன்பிறந்த தம்பி ஓ.ராஜா கலந்துகொண்டது அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஓ.ராஜாவை டிடிவி தினகரன் வரவேற்ற விதமும் அவரை உபசரித்த முறையும் அங்கிருந்தவர்களுக்கே வியப்பை தந்தது.முறையும் அங்கிருந்தவர்களுக்கே வியப்பை தந்தது.

 புன்னகை முகம்

புன்னகை முகம்

திருமண வரவேற்பு விழா நடைபெற்ற இடத்தில் கடுமையான வாகன நெரிசலில் சிக்கிக் கொண்ட ஓ.ராஜாவை, அமமுக முக்கிய நிர்வாகிகள் தான் வழியமைத்துக் கொடுத்து மேடைக்கு அழைத்து வந்துள்ளனர். ஓ.ராஜா மேடையேறுவதை கண்டதும் உற்சாகமடைந்த டிடிவி தினகரன், புன்னகை முகத்துடன் வரவேற்று மணமக்களிடம் அறிமுகம் செய்திருக்கிறார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட முயன்ற அவரை, இருந்து சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 விருந்து தவிர்ப்பு

விருந்து தவிர்ப்பு

ஆனால் தனது அண்ணி அண்மையில் காலமான சூழலில், திருமண நிகழ்ச்சியில் சாப்பிடுவது முறையாக இருக்காது எனக் கருதிய ஓ.ராஜா டிடிவி கொடுக்கவிருந்த விருந்தை தவிர்த்து அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். ஓ.ராஜா பார்ப்பதற்கு ஓ.பி.எஸ். சாயலில் இருப்பதால், மேடையிலிருந்து தூரத்தில் பார்த்தவர்கள் ஓ.பி.எஸ். தான் மணமக்களை வாழ்த்த வந்திருக்கிறார் என முணுமுணுத்த நிகழ்வும் நடந்துள்ளது.

 உற்சாக மனநிலை

உற்சாக மனநிலை

ஓ.ராஜாவின் வருகை சசிகலாவின் அதிமுக ரீ என்ட்ரி முயற்சிக்கு நல்ல சமிஞ்கையாக பார்க்கப்படுகிறது. இதனால் அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமான மனநிலையில் நேற்று காணப்பட்டிருக்கின்றனர். இதனிடையே மணமகன் வீட்டு அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+