ஒரு கூட வாங்காத பாஜக வேட்பாளர்..அதுவும் தமிழகத்தில்? என்னங்க சொல்றீங்க..பூத் ஏஜெண்ட் கூட போடலையா?
தஞ்சாவூர்: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் ஒரு பூத்தில் ஒரு ஓட்டு கூட பெறவில்லை என்பது அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியா முழுவதும் பெரு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளை விட குறைவான இடங்களிலேயே முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக தனி பெரும்பான்மை பெறுமா என்பதை தற்போதைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் பாஜக 233 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக இந்திய தேசிய காங்கிரஸ் 90க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாடி கட்சி 36 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 22 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும் போது இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக திமுக இருக்கும். தமிழகத்தை பொறுதவரை திமுக தலைமையில் தான் மற்ற கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில் கடந்த தேர்தளில் கூட்டணியில் இடம் பெற்றோ அல்லது தனித்தோ களம் கண்ட பாஜக தற்போது தனது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது. அக்கட்சி கூட்டணியில் பாமக, ஐஜேகே, தமாகா, தமமுக, புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. தேசிய அளவில் பாஜக கூட்டணி ஓரளவு வெற்றியை பெற்றிருந்தாலும், தமிழகத்தில் பலத்த அடியை பெற்றிருக்கிறது. அக்கட்சி கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சில இடங்களில் அக்கட்சி அதிமுக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் ஒரு பூத்தில் ஒரு ஓட்டு கூட பெறவில்லை என்பது அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் முரசொலி, தேமுதிக வேட்பாளர் சிவனேசன், நாம் தமிழர் கட்சி ஹுமாயூன் கபீர் ஆகியோர் களம் கண்டனர்.
வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் முரசொலி சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். பாஜக சார்பில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது கருப்பு முருகானந்தம் போட்டியிட்ட தஞ்சாவூர் தொகுதியில் ஒரு பூத்தில் அவருக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 81ல் ஆறாம் சுற்றில் ஒரு பூத்தில் முருகானந்தத்திற்கு ஒரு வாக்கு கூட விழவில்லை.
அதே நேரத்தில் மொத்தம் பதிவான 576 வாக்குகளில் திமுக வேட்பாளர் முரசொலி 529 வாக்குகளை பெற்றிருக்கிறார். சிவனேசன் ஏழு வாக்குகளை பெற்றிருந்தார். பாஜக சார்பில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பூத் ஏஜென்ட் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கூட பாஜகவுக்கு வாக்களிக்காதது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications