தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை-கும்பகோணம் சாலை வயலூரில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், இருவர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தஞ்சை கும்பகோணம் சாலை வயலூர் பகுதியில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து, எதிர்பாராத விதமாக, சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Bus accident near Tanjore kills 2

இதில், பேருந்து படிக்கட்டில், நின்று பயணம் செய்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதில் மேலும் ஒருவர் பின்னர் பலியானார்.

Bus accident near Tanjore kills 2

உடனடியாக அருகிலிருந்த கிராம மக்கள் விரைந்து வந்து பேருந்து கண்ணாடிகளை உடைத்து, பேருந்தில் இருந்த அவர்களை வெளியே இழுத்து காப்பாற்றினர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சில் வந்து படுகாயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Bus accident near Tanjore kills 2

விபத்து தொடர்பாக தஞ்சை மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவிழ்ந்த பல பேருந்தை இயந்திரம் கொண்டு வந்து மேலே எடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+