100 ஆண்டு பொது பாதை.. ஆனா பட்டியலின மக்கள் வரக்கூடாதம்! தஞ்சையில் தீண்டாமை உச்சம்
தஞ்சாவூர்: பொது பாதை வழியாக பட்டியலின மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை மூதாட்டி ஒருவர் தடுக்க முயன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சாதி ஆதிக்கம் அதிகம் இருந்த பகுதிதான் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம். சாணிப்பால், சவுக்கடி என்றாலே தஞ்சைதான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று தஞ்சை மக்கள் பெரும்பாலானோர் கல்வி கற்றிருக்கிறார்கள். நவீன நகரங்களில் ஒன்றாக தஞ்சை மிளிர்கிறது.

இருப்பினும் இன்னும் அந்த சாதி ஆதிக்கம் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதை சமீபத்திய சம்பவம் ஒன்று நிரூபித்திருக்கிறது. தஞ்சை மாவட்டம் கொல்லாங்கரை கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பகுதியில் உள்ள மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மண் பாதை ஒன்றை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தற்போது மாணவர்கள் கொல்லாங்கரை கிராமத்திலிருந்து அரசு உயர்நிலை பள்ளிக்கும், மருங்குளம் மேல்நிலை பள்ளிக்கும் செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தினர், பாதை தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கோரி, பொதுப்பாதையாக பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் கடந்த 23ம் தேதி இளைஞர் ஒருவர் பட்டியலின மாணவர்களை அழைத்துக்கொண்டு அந்த பாதையில் போயிருக்கிறார். உடனே அப்பகுதியில் உள்ள மூதாட்டி ஒருவர், கையில் கம்புடன் அவரை தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், கம்பை தள்விட்டு இளைஞர் முன்னால் நடக்கவே, வேறு வழியின்றி அவர் பின்னால் வந்த மாணவர்களை மிரட்டியுள்ளார் மூதாட்டி. உடன் வந்த மற்ற இளைஞர்கள், மாணவர்களை பத்திரமாக அழைத்து சென்றிருக்கின்றனர்.
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று விழா நடந்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. உண்மையில் தமிழ்நாடு கல்வியில் சிறக்க வேண்டும் எனில், சாதி வேறுபாடின்றி மாணவர்கள் கல்வி பயின்றால் மட்டுமே சாத்தியமாகும். கல்வி பயில்வதற்கு சாதி தடையாக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலம், எப்படி மாற்று சாதியினர் கைக்கு மாறியது? அவர்களால் எப்படி வேலி போட்டு தடுக்க முடிந்தது? ஏன் அரசு இதில் தலையிடவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உள்ளூர் அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை முன்னணி சார்பில் கடந்த மே மாதம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை பயன்படுத்தக்கூடாது என தடுக்கும் காட்சி தான் இது
— தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) September 25, 2025
சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும் மாணவர்களை தடுக்கும் அராஜகம். pic.twitter.com/pzzx3Zoex2
பிரச்சனைக்கு விரைவில் உரிய தீர்வு காண்பதாக அரசு நிர்வாகம் தரப்பில் அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால்தான் நேற்றைய தினம் பட்டியலின மாணவர்கள் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
காவல்துறை என்ன சொல்கிறது?
"தஞ்சாவூர் மாவட்டம் கொல்லாங்கரை ஊரைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது தெருவிலிருந்து கொல்லாங்கரை அரசு உயர் நிலைப்பள்ளிக்கு செல்லும் தூரம் 2½ கி.மீ மற்றும் மருங்குளம் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் தூரம் 04 கி.மீ. சுற்றி செல்ல வேண்டியுள்ளதால், 1½ கி.மீ. தூரம் குறைவாக இருக்கும் பொருட்டு குறுக்கு பாதையாக, தனிநபர் பெயரில் பட்டா உள்ள புல எண். 76/18 (96 செண்ட்) விவசாய நிலத்தை மண் பாதையாக கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் நிலையில் இதனை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் http://O.S.No.292/20112-ன்படி தனக்கு சாதமாக 29.04.2021-ஆம் தேதி தனிநபர் ஆணை பெற்றுள்ளார்.
மீண்டும் அனுமதியின்றி மேற்கண்ட விவசாய நிலத்தை பாதையாக மாற்றி சாலை அமைக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை W.P.(MD)No. 4371/2022-ன்படி சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்ட பிறகும், 2024 ஆம் ஆண்டு சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டதால், தனிநபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு எண். Cont.P.(MD).No. 2770/2024-படி அமைக்கப்பட்ட சாலை அகறப்பட்டதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் 05.06.2025-ஆம் தேதி மேற்கண்ட விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 100 வாழை மரங்கள் மற்றும் 50 தென்னை கன்றுகளை சேதப்படுத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்வழக்கில் தனிநபர் சரியான நடவடிக்கை இல்லை என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில் வேறு புலன் வசாரணை அதிகாரி நியமிக்க உத்தரவிப்பட்டுள்ளது. மேலும் கடந்த 23.09.2025 அன்று தனிநபரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாதையை கொல்லாங்கரை ஊரைச் சேர்ந்தவர்கள்; அகற்றி மாணவர்களை அந்த நிலம் வழியாக அழைத்து சென்றபோது வாக்குவாதம் செய்த தனிநபரின் மனைவி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனி நபர் பட்டா நிலத்தை தூரம் குறைவாக செல்லும் பொருட்டு பாதையாக ஒரு தரப்பினர் பயன்படுத்த முயற்சி செய்வதும், தனி நபர் அதனை தடுக்கும் பொருட்டு தகுந்த நீதிமன்ற உத்தரவுகள் மூலம் வேலி அமைத்து பயிர் சாகுபடி செய்வதாலும் தொடர்ந்து வாக்குவாதமும், மாணவர்களை இந்த பாதையில் மட்டுமே பள்ளிக்கு அனுப்புவோம் என்றும் சுற்றிச்செல்லும் பாதையில் (2½ கி.மீ மற்றும் 4 கி.மீ தூரம்) அனுப்பமாட்டோம் என்றும் பிரச்சனை செய்து வருவதால் இருவேறு மாற்று சமுதாயத்தினர் தொடர்பான பிரச்சனை என்பதால் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் இணக்கமான முறையில் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தஞ்சாவூர் காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
உண்மையில் நிலம் யாருக்கு சொந்தம்? ஏன் பட்டியலின மக்களை சிலர் தடுக்கிறார்கள்? பொதுப்பாதை எனில் ஏன் இன்று வரை அங்கு சாலை அமைக்கப்படாமல் இருக்கிறது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications