கர்நாடகா, மத்திய அரசுக்கு எதிராக 'காவிரி பந்த்'- 1,00,000 கடைகள் மூடல்-"வெறிச் டெல்டா"வீடியோ
தஞ்சாவூர்: தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீரை திறந்துவிடாத கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும் தமிழ்நாட்டுக்கு உரிய நீதியை பெற்றுத் தராத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் காவிரி டெல்டாவில் பந்த் போராட்டம் முழு அளவில் நடைபெற்று வருகிறது.
காவிரியில் 24,000 கன அடிநீரை திறக்க கோரியது தமிழ்நாடு அரசு. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையமோ வெறும் 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. இதற்கு எதிரான வழக்கிலும் 5,000 கன அடி நீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா இதனை மதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் பாஜக தூண்டிவிட்ட போராட்டங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை முழுமையாக திறக்கவில்லை. அத்துடன் மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த், எல்லை பந்த் என நாள்தோறும் போராட்டங்களை கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் நடத்தி வருகின்றன.
#WATCH | Cauvery water issue | Thiruvarur, Tamil Nadu: Cauvery Delta Protection Movement calls for a bandh to protest against the Karnataka government's failure to release adequate water for irrigation. pic.twitter.com/nZ4j1vAmrd
— ANI (@ANI) October 11, 2023
தமிழ்நாடு சட்டசபையிலும் காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தரக் கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசு, இதற்கு அழுத்தம் கொடுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் காலை 6 மணி முதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்துக்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்திருந்தது.
#WATCH | Tamil Nadu: Farmers’ Union call for protest in Nagapattinam over the Cauvery water issue. pic.twitter.com/vudKNKuwCh
— ANI (@ANI) October 11, 2023
திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பை முன்னிட்டு காலை முதலே தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகள், திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் என மொத்தம் சுமார் 1,00,000-க்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்திலும் இயல்பு வாழ்க்கை முடங்கி வெறிச்சோடி காணப்படுகிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications