விளை நிலத்தில் நிலக்கரி சுரங்கம்..எங்கள் தலையில் விழுந்த இடி..மத்திய அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் மத்திய அரசைக் கண்டித்து கடுமையான போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. இது தடுக்கப்படாவிட்டால் வளம் மிகுந்த காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து நெய்வேலிக்கு அருகே ஆண்டுக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3ஆவது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ. 3556 கோடி செலவில் அமைக்க என்.எல்.சி இந்தியா நிர்வாகக் குழுவில் 21.07.2022 அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்தவுள்ளது.

காவிரி படுகையில் சுரங்கம்
என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரி படுகையை ஒட்டியே அமையவுள்ளது. ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம்
இவற்றில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் படக் கூடும். இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன.

விவசாயிகள் கடும் எதிர்ப்பு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல உள்ளது என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு எதிராக போராட்டம்
நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர் பாண்டியன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரி பாசன மாவட்டங்கள் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் சீரழிவுப் பகுதியாக மாறிவிடக்கூடும் என்பது விவசாயிகளின் அச்சமாகும். மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும் இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் மாலையில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
-
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி -
துணை முதல்வர் பதவி.. நாக்பூர் ரூட்டில் எடப்பாடிக்கு செக் வைத்த நயினார், வானதி! கேம் அப்படியே மாறுது? -
Chennai Rain: அடுத்த 2 மணி நேரம்.. சென்னையில் பிச்சு உதறப்போகுது மழை.. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்! -
B28 புல்லட் ரயில்.. சென்னை டூ மதுரை 2 மணி நேரம்தான்... இந்தியாவின் புதிய 'அரசன்'.. முழு விவரம் -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம் -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம்












Click it and Unblock the Notifications