வலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசு தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை மற்றும் பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பல லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு செல்ல இருக்கிறார்கள்.
இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க இன்று போராட்டம் நடந்து வருகிறது. கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று காலை மக்கள் பேரணியாக சென்றார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் தற்போது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஏற்கனவே தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விவசாயிகள், பெண்கள், காவிரி படுகை பாதுகாப்பு இயக்கத்தினர் பலர் பேரணி நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications