தஞ்சையில் மாணவர்கள் கண் முன்னே குத்தி கொல்லப்பட்ட ஆசிரியை.. தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
தஞ்சாவூர்: பள்ளியில் மாணவர்கள் கண் முன்னே ஆசிரியை ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர்தான் 26 வயதான ரமணி. மல்லிப்பட்டிணத்திற்கு பக்கத்து ஏரியாவான சின்னமனையில் இவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வரும் மதன் குமார் என்பவரும், ரமணியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்திருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த வந்த மதன் குமார், தனது தங்கை திருமணத்திற்காக தஞ்சை வந்திருக்கிறார். திருமணம் முடிந்தும் வெளிநாடு செல்லாமல் மீன் பிடி தொழில் செய்து வந்திருக்கிறார்.

இப்படி இருக்கையில் தனது திருமணம் குறித்து ரமணியின் பெற்றோரிடம், தன்னுடைய பெற்றோரை வைத்து மதன் குமார் பேச வைத்திருக்கிறார். ரமணியின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்மதம் தெரிவித்து நீண்ட நாட்கள் ஆகியும் கூட, திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கடுப்பான மதன் குமார், ரமணியின் பெற்றொரிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்திருக்கிறார்.
மதன் குமாரின் நடத்தை சரியில்லை என்றும், அவருக்கு பெண்ணை கட்டி கொடுத்தால், வாழ்க்கை நாசமாகிவிடும் என்றும் ரமணியின் பெற்றோருக்கு அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். எனவேதான் பெற்றோர் திருமணத்திற்கு தயங்கியுள்ளனர். மறுபுறம் ரமணியிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று மதன் குமார் அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார். சம்பவம் நடந்த நவ.20ம் தேதியும் (நேற்று) இதுபோன்று வாக்குவாதம் நடந்திருக்கிறது.
அதாவது நேற்று பள்ளிக்கு வந்த மதன் குமார் ஆசிரியர் அறையில் இருந்த ரமணியை சந்தித்திருக்கிறார். அறையில் ரமணியை தவிர வேறு யாரும் இல்லாதது மதன் குமாருக்கு வசதியாக போய்விட்டது. தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று ரமணியிடம் மதன் குமார் வலியுறுத்த, ரமணி மறுத்துள்ளார். இப்படியாக வாக்குவாதம் தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு மிக நிச்சயமாக ரமணி மறுக்கவே, மதன் குமார் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து ரமணியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
ரத்தம் பீறிட சம்பவ இடத்தில் ரமணி மயங்கி விழ, செந்தில் குமார் அங்கிருந்து தப்பிக்க முயன்றிருக்கிறார். ஆனால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செந்தில் குமாரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
மறுபுறம் ரத்த சொட்ட சொட்ட ரமணியை ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் ரமணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
பள்ளியில் ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சம்பவம் குறித்த விளக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், குற்றம்சாட்டப்பட் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சமூக செயற்பாட்டாளர் சரவணன் என்பவர் அளித்துள்ள புகாரில், பள்ளியில் பாதுகாவலர் இல்லை, சுற்றுசுவரோ, நுழைவு வாயிலோ இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications