பாஜகவில் தஞ்சமடைந்த.. ஹெலிகாப்டர் சகோதரரில் ஒருவருக்கு கொரோனாவாம்.. ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி
ஹெலிகாப்டர் சகோதரரில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது
தஞ்சை: கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்ஆர் கணேஷ், எம்ஆர் சுவாமிநாதன் என்ற சகோதரர்கள்.. கும்பகோணத்தை சேர்ந்தவர்கள்.. விக்டரி என்கிற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்துபவர்கள்..!
வெளிநாட்டு மாடுகளை கொண்டு 3 இடங்களில் பால் பண்ணை வைத்து நடத்துபவர்கள்.. ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள்..

ஹெலிகாப்டர்
இப்படி பல தொழில்களில் இந்த சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர்.. ஆனால் 2 பேருமே ஒன்றாகவே ஹெலிகாப்டரில் வலம் வந்து கொண்டே இருப்பார்களாம்.. பணத்தை வசூல் செய்வதும் இப்படி பறந்து பறந்துதான் வசூலிப்பார்களாம்.. அதனாலேயே ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். இதன்மூலம் தங்களை பிரமாண்ட தொழில் அதிபர்கள் போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி பொதுமக்களை நம்ப வைத்தனர்.. வெளிநாடுகளில் தங்கச்சுரங்கம் இருப்பதாகவும் சொல்லி அதையும் நம்ப வைத்தனர்..

மோசடி
ஒருமுறை நிதி நிறுவனத்தில், ஒன்று கொடுத்தால் 3 என்பது போல கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்ததும், பலதரப்பட்ட மக்கள் கோடிக்கணக்கில் முதலீடாக கொடுத்த பணத்தை ஏமாற்றியதாக இவர்கள் மீது புகார்கள் எழுந்தது.. எனவே, உடனடியாக தங்கள் பாதுகாப்புக்காக பாஜகவில் இணைந்தனர்.. அத்துடன், பல கூட்டங்களில் கலந்துகொண்டனர்.. வேல் யாத்திரைக்கு வந்த எல்.முருகனுக்கு உபசரிப்பு செய்ததாகவும், அப்போது லட்சக்கணக்கில் கட்சி நிதியை தந்ததாகவும்கூட தகவல்கள் கசிந்தன.

பாஜக
முருகனை தவிர, கருப்பு முருகானந்தம், எச்.ராஜா உள்ளிட்டவர்களும், இந்த சகோதரர்களோடு நெருக்கமாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது.. முதலீடு செய்து ஒரு வருடமாகியும் அசலும் வட்டியும் வராததையடுத்துதான், பணம் முதலீடு செய்தவர்களுக்கு லேசான கலக்கம் வந்துள்ளது.. அதனால், கொடுத்த பணத்தை கேட்க ஆரம்பித்து நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்..

கும்பகோணம்
அதற்கு இந்த சகோதரர்கள், "நாங்க பாஜகவில் இருக்கிறோம்.. மேலிடத்தில் தொடர்பில் உள்ளோம்.. எங்களை பற்றி புகார் தந்தாலும்கூட, ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது" என்றும் மிரட்டினார்களாம். ஆனாலும் கும்பகோணத்தை சேர்ந்த பைரோஸ் பானு - ஜபருல்லா தம்பதியினர் மாவட்ட எஸ்பியிடம் புகார் தந்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. இறுதியில், புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் கடந்த 6-ம்தேதி போலீசார் கைது செய்தனர்...

கொரோனா தொற்று
இவர்களிடம் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, அவர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது... இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications