அடச்சீ.. இவரும் ஒரு பெண்ணா? அதுவும் பித்தளை பாத்திரத்துக்குள்ளே.. பேரு ஜெயலட்சுமியாம்..இப்ப ஜெயிலில்
தஞ்சை: பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளிருந்து, துர்நாற்றம் வீசியதால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியும் பரபரப்பும் அடைந்தனர்.. இந்த சம்பவம் குறித்த உண்மையையும் போலீசார் வெளிக்கொணர்ந்து, குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்துள்ளது பண்டாரவாடை கரை தெரு.. இங்கு வசித்து வந்தவர் செல்வமணி.. 55 வயதாகிறது.. இவரது கணவன் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
செல்வமணிக்கு 2 மகன்கள், 3 மகள்கள் இருக்கின்றனர்... இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், இன்னொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார்கள்.

சந்தேகம்
3 மகள்களுக்குமே திருமணமாகிவிட்டது.. அவரவர் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்... இதில் ஒரு மகள் கீதா வெளிநாட்டில் இருக்கிறார்... இந்த நிலையில், கடந்த 23ம் தேதியிலிருந்து, மறுநாள்வரை செல்வமணியின் வீடு பூட்டி இருந்தது.. பொதுவாக செல்வமணி வீட்டைவிட்டு எங்குமே செல்லமாட்டாராம்.. அதனால், அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு சந்தேகம் அடைந்து, மகள் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர்.. ராஜலட்சுமியும் வீட்டுக்கு வந்து, பூட்டப்படிருந்த கதவின் ஓரம் நின்று வீட்டிற்குள் ஏதாவது சத்தம், வாசனை வருகிறதா என்று சோதனையிட்டார்...

பித்தளை பாத்திரம்
அப்போது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார்... இதனால் பயந்துபோன ராஜலட்சுமி, அங்கிருந்தோரின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது, செல்வமணி பெரிய பித்தளை பாத்திரத்தில் சடலமாக கிடந்தார்.. அந்த பித்தளை குண்டானில் தலைகீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.. இதுகுறித்து பாபநாசம் போலீசாருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து வந்து, செல்வமணியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வமணியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடந்தது..

தலை குப்புற
அப்போது, செல்வமணியின் பேத்தியான ஜெயலட்சுமி என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.. ஜெயலட்சுமிக்கு 28 வயதாகிறது.. இவர், செல்வமணியின் இன்னொரு கீதாவின் மகள் ஆவார்.. திருமணமாகி கணவர் ரமேஷுடன் வீரசிங்கம்பேட்டையில் வசித்து வருகிறார். கீதா வெளிநாட்டில் வேலை பார்த்தாலும், செல்வமணிக்கு, மாதா மாதம் பணம் அனுப்புவாராம்.. ஆனால், இது ஜெயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. அதனால், பாட்டி செல்வமணியிடம், தன்னுடைய அம்மா அனுப்பிய பணத்தை திரும்ப கேட்டு தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்குமே தகராறு நடந்து வந்துள்ளது..

பித்தளை குண்டான்
கடந்த 23ம் தேதியும், செல்வமணியின் வீட்டுக்கு சென்ற பேத்தி ஜெயலட்சுமி, மறுபடியும் தன் அம்மா அனுப்பிய பணத்தை திருப்பி தருமாறு தகராறு செய்துள்ளார். அதற்கு செல்வமணி மறுக்கவும், ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, பாட்டி செல்வமணியை கீழே தள்ளிவிட்டார்.. இதில் செல்வமணியின் தலை, தரையில் பட்டு, ரத்தம் தெறித்து கொட்டியது.. அப்போதுகூட ஆத்திரம் தீராத ஜெயலட்சுமி, பாட்டியின் புடவையாலேயே, அவரது கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொன்றுவிட்டார்.. இறுதியில், அந்த சடலத்தை, தலை குப்புற பித்தளை பாத்திரத்துக்குள் அமுக்கி வைத்துவிட்டு, வீட்டையும் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பியிருப்பது தெரியவந்துள்ளது. இப்போது, பொறாமையால் பாட்டியை கொன்ற, பேத்தி ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications