Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுடன் ஒரே அணி.. பாஜகவை பந்தாடிய அதிமுக நிர்வாகி! அதிராம்பட்டினத்தில் ரயிலுக்காக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் நிறுத்த வலியுறுத்தியும், கம்பன், சோழன் ரயில்களின் சேவைகள், இணைப்பு ரயில் சேவைகளை வழங்க வலியுறுத்தியும் ரயில் நிலையத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கட்சி பேதமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தாம்பரம் - செங்கோட்டை ரயிலை அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தவும், அகல ரயில் பாதை திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் இவ்வழியாக இயக்கப்பட்டு வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்படவும், கூடுதல் ரயில் சேவைகளை இந்த ரயில் நிலையத்திற்கு வழங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DMK, ADMK and other parties protested at Adirampattinam railway station

அதிராம்பட்டினம் மார்க்கத்தில் அமைக்கப்பட்டு உள்ள அகல ரயில் பாதைக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த ரயில் போராளி அஹமது அலி ஜாபரின் அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை என்ற அமைப்பு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் குணசேகரன், அதிமுக நகர செயலாளர் பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் அஹமது தமீம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள், ஊர்மக்கள் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கூடுதல் ரயில் சேவைகளை வழங்கக்கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பேசிய ரயில் போராளி அஹமது அலி ஜாபர், "அதிராம்பட்டினத்தில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தினால் போதும் என்றுதான் கேட்கிறோம். மீனவர்கள், சிறு வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டுவிடாதீர்கள்.

DMK, ADMK and other parties protested at Adirampattinam railway station

ரயில்வே அமைச்சர் அவர்களுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். இன்னும் ஒரு மாதகாலம் கெடு விதிக்கிறோம். பழைய ரயில் வண்டிகளான கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் அதிராம்பட்டினத்தில் நின்று போக வேண்டும். எங்களுக்கு இந்த வந்தே பாரத் எல்லாம் வேண்டாம்.

நாங்கள் கேட்கும் ரயில்கள் வராவிட்டால் அடுத்த மாதம் 1 ஆம் தேதி எந்த அறிவிப்பும் இன்றி யார் சொல்லையும் கேட்காமல் திருச்சியில் அடுத்த மாதம் 1 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்." என எச்சரிக்கை விடுத்தார்.

DMK, ADMK and other parties protested at Adirampattinam railway station

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக நகர செயலாளர் பிச்சை, "எர்ணாகுளம் ரயில், செகந்திராபாத் ரயில் முத்துப்பேட்டையில் நிற்பதில்லை. திருவாரூர் - காரைக்குடி ரயில் மட்டுமே நிற்கிறது. சிலர் கடைசி நேரத்தில் செய்த சூழ்ச்சி காரணமாக முத்துப்பேட்டையில் ரயில் நின்றது. அது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மத்தியில் ஆள்வது எங்கள் கூட்டணி கட்சி என்றாலும் கூட்டணி என்பது எங்கள் தோளில் கிடக்கும் துண்டு. அதிராம்பட்டினத்தின் மரியாதைக்காக அந்த துண்டையும் தூக்கி வீசுவோம். பாஜகவின் சூழ்ச்சியால்தான் முத்துப்பேட்டையில் அந்த ரயில் நிறுத்தப்பட்டு உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மாற்றுக் கருத்துக்கள் எங்களுக்குள் இருந்தாலும் இந்த ஊர் நன்மைக்காக கூடி நிற்கிறோம்.

இப்படிதான் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையானது. அப்போது யாரும் அதை எதிர்க்காததால் அப்படியே போய்விட்டது. இப்படி ஒவ்வொன்றாக இழக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. தாம்பரம் ரயில் அதிரையில் நிற்பதுடன், சோழன் எக்ஸ்பிரஸின் இணைப்பு ரயிலான மயிலாடுதுறை - காரைக்குடி ரயிலை நிறுத்த 2022 அக்டோபரிலேயே ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+