Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துக்க வீடாக மாறிய திருமண வீடு.. உபயதுல்லா தனது பேரன் கல்யாணத்திற்காக கிளம்பியபோது ஏற்பட்ட சோகம்!

பேரனின் திருமணத்தை நடத்தி வைக்கக் கிளம்பியபோதுதான் உபயதுல்லா காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் : திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா (83) தஞ்சாவூரில் இன்று காலை காலமானார். உபயதுல்லா தனது பேரனின் திருமணத்திற்காக திருமண மண்டபத்திற்கு கிளம்பும் நேரத்தில் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமண வீடு, சோக வீடாக மாறியுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவின் தங்கையின் பேரன் திருமணம் இன்று தஞ்சாவூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை உபயதுல்லா தான் தலைமை தாங்கி நடத்த இருந்தார்.

அந்த திருமணத்திற்கு கிளம்பி காருக்கு செல்லும்போதுதான் அவருக்கு லேசான மயக்கம் வருவது போல இருந்துள்ளது. இதனை அவர் சொன்ன உடனே, உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது.

எஸ்.என்.எம்.உபயதுல்லா

எஸ்.என்.எம்.உபயதுல்லா

தஞ்சாவூரில் ஜவுளி, பேன்சி பொருட்கள் வியாபாரம் என நகரில் பல இடங்களில் கடைகளை நடத்தி வந்தார் எஸ்.என்.எம்.உபயதுல்லா. அரசியலில் ஆர்வம் கொண்ட உபயதுல்லா, திமுக தொடங்கிய காலம் முதலே அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார். 1962ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்றினார். அப்போதே, கருணாநிதியின் நெருக்கமான நட்பைப் பெற்றார்.

27 ஆண்டுகள்

27 ஆண்டுகள்

1987ஆம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 27 ஆண்டுகள் தஞ்சாவூர் திமுக நகரச் செயலாளராக பணியாற்றினார் உபயதுல்லா. தஞ்சாவூர் தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வணிக வரித்துறை அமைச்சராகச் செயல்பட்டார். திமுக வர்த்தகர் அணியின் தலைவராகவும், செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.

தமிழ்ப்பற்று

தமிழ்ப்பற்று

தமிழ் மொழி மீது கொண்டிருந்த பற்று காரணமாக தஞ்சை முத்தமிழ் மன்றத்தை நடத்தி வந்தார். தான் பேசும் கூட்டங்களில் திருக்குறளை மேற்கொள் காட்டிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் உபயதுல்லா. இதன் காரணமாக குறள்நெறிச் செல்வர் என்று அழைக்கப்பட்டு வந்தார். சமீபத்தில் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருதையும் உபயதுல்லா பெற்றார்.

உபயதுல்லா தலைமையில் திருமணம்

உபயதுல்லா தலைமையில் திருமணம்

இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவின் தங்கை பேரனின் திருமணம் இன்று தஞ்சாவூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை இவர் தலைமை தாங்கி நடத்த இருந்தார். திருமணத்திற்காக நேற்று முதலே உறவினர்கள் பலரும் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு தனது வீட்டிலிருந்து திருமண மண்டபத்துக்கு புறப்பட்டார் உபயதுல்லா.

சோகமாக மாறிய திருமண வீடு

சோகமாக மாறிய திருமண வீடு

அப்போது திடீரென தனக்கு லேசான மயக்கம் வருவதாக கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் உடனடியாக அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் திருமண வீடு சோக வீடாக மாறியுள்ளது. அவரது மரணம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஞ்சலி

அஞ்சலி

உபயதுல்லாவின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, அவரது உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உபயதுல்லாவின் உடல் ஆத்துப்பாலத்தில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபயதுல்லாவின் மறைவுக்கு, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+