ரைட் ஹேண்டுக்கு ‘செக்’.. வைத்திலிங்கம் கோட்டையில் வரிந்துகட்டும் எடப்பாடி.. பலத்தை காட்ட செம பிளான்!
தஞ்சாவூர் : ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திருச்சியில் நடத்திய மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓபிஎஸ்ஸின் வலதுகரமான வைத்திலிங்கத்தின் கோட்டையான ஒரத்தநாட்டில் வரிந்துகட்டி களமிறங்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி.
அண்மையில் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளனர். இதற்கான விழா பொதுக்கூட்டமாக வரும் மே 4ஆம் ஆதேதி நடைபெறவுள்ளது. இதற்காக தஞ்சைக்கு வருகை தர உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பதிலடி கூட்டம் : அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளது என்பதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளதால் ஓபிஎஸ் கட்சி பெயரையும், கொடியையும், சின்னத்தையும், பயன்படுத்துவது சட்டத்தை மீறும் செயல் என ஈபிஎஸ் அணியினர் தெரிவித்த எதிரப்பையும் மீறி திருச்சியில் ஓபிஎஸ் தரப்பு பிரமாண்டமாக முப்பெரும் விழா மாநாட்டை நடத்தியது. இதற்கு பதிலடியாகவே ஒரத்தநாட்டில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் வரும் மே 4ஆம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் காமராஜ் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். டெல்டா மண்டலத்தில் தங்களை பலப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் பொதுக்கூட்டம் அமையும் என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

வைத்திலிங்கத்திற்கு செக் : அதிமுக முன்னாள் அமைச்சரும் ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் ஓபிஎஸ்ஸுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அவரை தன் பக்கம் இழுக்க பலமுறை முயன்றும், வைத்திலிங்கம் பிடிகொடுக்கவில்லை. வைத்திலிங்கத்திற்கு செக் வைக்கும் வகையிலேயே, அவரது ஏரியாவான ஒரத்தநாட்டில் இருந்து அமமுகவின் முக்கிய புள்ளியான மா.சேகரை, மாஜி அமைச்சர் காமராஜ் மூலம் தன் பக்கம் இழுத்தார் ஈபிஎஸ்.
இந்நிலையில் தான், திருச்சி மாநாட்டை நடத்திய ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருக்கும் வைத்திலிங்கத்தின் சொந்த மண்ணில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், வைத்திலிங்கத்தின் சொந்த தொகுதியான ஒரத்தநாட்டில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

வரிந்துகட்டும் மாஜிக்கள் : முன்னாள் அமைச்சர் காமராஜ் இந்தப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தாலும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பலத்தைக் காட்ட பலமான கூட்டத்தைக் கூட்டுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
திருச்சியில் ஓபிஎஸ்ஸுக்கு கூடிய கூட்டத்தால் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமியை, மே 4ஆம் தேதி ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூடவிருக்கும் கூட்டத்தின் மூலம் கூல் செய்ய தீவிரமாக தயாராகி வருகிறார்களாம் அதிமுக மாஜிக்கள்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications