தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா பாதிப்பு.. 4 மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு.. மக்கள் வரவேற்பு

கஜா புயலால் டெல்டா பகுதியில் 4 மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா பகுதியில் 4 மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

Gaja Storm: Government orders to close the TASMAC for next few days in 4 districts

இந்த நிலையில் கஜா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த நேரத்தில் மதுவில் பணத்தை செலவு செய்ய கூடாது என்றும், பாதுகாப்பு கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மறுஅறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் இயங்காது.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குனர் கிரிலோஸ்கர் வெளியிட்டார். இந்த நடவடிக்கை டெல்டா பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அருகாமையில் உள்ள மற்ற மாவட்ட மக்களும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Gaja Storm: Government orders to close the TASMAC for next few days in 4 districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X