நான் துணை நிற்பேன் தமிழகமே.. டெல்டாவிற்காக குரல் கொடுத்த ஹர்பஜன் சிங்!
கஜா புயலில் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார்.
Recommended Video

தஞ்சாவூர்: கஜா புயலில் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார்.
கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் டெல்டா மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
மக்கள் அங்கு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது தமிழகம் முழுக்க இதற்காக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
|
ஹர்பஜன் டிவிட்
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டில் ''ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே'' என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

பகிர்ந்தார் ஹர்பஜன்
அதுமட்டுமில்லாமல் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டில் உதவி எண்களையும் பகிர்ந்துள்ளார். மீட்பு பணிக்காக அரசு அளித்து இருக்கும் அவசர உதவி எண்களை அளித்து இருக்கிறார்.
|
பலரும் பாராட்டு
இவரின் இந்த குணத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர் ''11 வருஷம் சி.எஸ்.கே கேப்டனா இருந்த தோனி கூட இப்படி சொன்னதில்லயா..மனுஷன்யா நீ.'' என்றுள்ளார்.

சென்னை அணி
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்து வருட ஐபிஎல் போட்டியிலும் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார். இவர் சென்னை அணியில் இணைந்ததில் இருந்தே தமிழில் அதிகம் டிவிட் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications