டெல்டாவில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்.. அகதிகள் முகாமில் உதவி.. பெரும் வரவேற்பு!
கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
Recommended Video

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. அங்கு அரசு பெரிய அளவில் இன்னும் நிவாரண பணிகளை செய்யவில்லை.
இந்த நிலையில் அங்கு நிவாரண பணிகளை சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி செய்து வருகிறது.
|
மூன்று நாட்கள்
நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூன்று நாட்கள் இந்த நிவாரண பணிகள் திட்டமிடப்பட்டு இருக்கிறது. நேற்று காலை தொடங்கிய இந்த நிவாரண உதவி வழங்கும் பணிகள் நாளை இரவு வரை நடைபெறும். மூன்று நாட்களில் அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவிகளை வழங்க சீமான் திட்டமிட்டுள்ளார்.
|
அகதிகள் முகாம்
புதுக்கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களும் இந்த புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அங்கு பெரிய அளவில் உதவிகள் சென்று சேரவில்லை. அரசு அதிகாரிகள் அந்த பகுதியில் கவனம் செலுத்தவில்லை என்று புகார் வந்துள்ளது.
|
சென்று பார்த்தார்
இந்த நிலையில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை ஈழத்தமிழர் முகாமில் சீமான் ஆய்வு செய்தார். அங்கிருந்த மக்களிடம் நிவாரண பொருட்களை வழங்கினார். அவரிடம் ஈழத்தமிழர்கள் நிவாரண பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தனர்.
|
வேறு எங்கு எல்லாம் சென்றார்
இது மட்டுமில்லாமல் டெல்டாவின் பிறபகுதிகளுக்கும் சென்று அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். திருவாரூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்றார். இன்னும் தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் செல்ல இருக்கிறார். இவரது நிவாரண பணிகளுக்கு மக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
