தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வரின் புயல் சேத ஆய்வு பாதியிலேயே ரத்து.. காரணம் மழை!

தமிழக முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வரின் பயணம் திடீர் ரத்து ... என்ன காரணம்?- வீடியோ

    தஞ்சாவூர்: தமிழக முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் இன்று ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று பார்வையிட்டார்.

    அங்கு உள்ள மக்களிடம் புயல் சேதம் குறித்து கேட்டறிந்தார். அதோடு, மக்களுக்கு நிவாரண நிதியும் வழங்கினார்.

    டெல்டாவில் மீண்டும் பலத்த மழை.. நிவாரண பணிகள் தடைபட்டது.. மக்கள் கலக்கம்! டெல்டாவில் மீண்டும் பலத்த மழை.. நிவாரண பணிகள் தடைபட்டது.. மக்கள் கலக்கம்!

    ரத்து செய்தார்

    ரத்து செய்தார்

    இந்த நிலையில் தற்போது அவர் நாகை, மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை செல்கிறார்

    சென்னை செல்கிறார்

    நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதல்வர். அவர் சென்ற ஹெலிகாப்டர் சென்னை நோக்கி திருப்பப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் இவர் சென்னை வருவார் என்று கூறப்பட்டுள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மக்கள் அதிர்ச்சி

    மக்கள் அதிர்ச்சி

    மோசமான வானிலை நிலவுகிறது, அதனால் மழையில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் பயணம் ரத்தானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் வருகையை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

    English summary
    Gaja Storm: TN CM cancels his visit to Delta at Mid due to heavy rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X