தஞ்சாவூரே வியந்துடுச்சே.. ஊர்மெச்சிய "மாப்ளை".. ஆமா, அதென்ன பின்னாலயே வருது.. துள்ளிகுதித்த ஒரத்தநாடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், இணையத்தில் 2 நாட்களாக பேசப்பட்டு வருகிறது.. அப்படி என்ன வித்தியாசம் ஒரத்தநாடு பகுதியில் நடந்துள்ளது?
திருமண பரிசுகள் என்றாலே யாராலும் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.. புதுமண தம்பதிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் பொக்கிஷமாக இருக்கும் ஒரு தோற்றத்தை உருவாக்குதே இத்தகைய சிறந்த திருமண பரிசுகள்தான்.

அதேபோல, குடும்பத்தில் சீர்வரிசை என்றால், கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை தம்பதிகளுக்கு சீர் வரிசைகளாக தருவார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.
அமர்க்களம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்..
மாட்டுவண்டிகள்: இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.. கடந்த மாதம் நரிக்குடியில் ஒரு திருமணம் நடந்தது.. மாப்பிள்ளை சிவாவுக்கு சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் நிறைய ஆர்வமாம்.
அதனால், சிவாவின் நண்பர்கள், அவருக்கு பிடித்த, சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக கொண்டு வந்திருந்தனர்.. அவர்கள் கையில் சேவல்களையும், கிடாய்களையும் பார்த்ததுமே, மாப்பிள்ளை மணமேடையிலேயே துள்ளி குதித்தார்.. திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் இந்த சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
ஒரத்தநாடு: இதோ இப்போது ஒரு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.. இதைப்பற்றின செய்திகள்தான் இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன.. இதில் என்ன சிறப்பு என்றால், பொதுவாக பெண் வீட்டார், சீர் வரிசை அளிப்பதுதான் அதிகமாக இருக்கும்... ஆனால் பெண்ணை நிச்சயம் செய்யப்போன மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு தருவதற்காக சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.. இப்படி ஒரு புதுமை நம்முடைய தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்துள்ளது.
ஒரத்தநாடு தாலுகா அருமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்... இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணான மலேசியாவை சேர்ந்த தினோஷாலிக்கும், திருமணத்தை இருவீட்டு பெரியவர்களும் நிச்சயித்திருந்தார்கள். தினோலிஷாவின் அப்பா ஒரு தொழிலதிபராம்.
நிச்சயதார்த்தம்: தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான நிச்சயதார்த்த விழாவை பெரியவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்துக்கு சுற்றம்முற்றம் உட்பட அக்கம்பக்கம் பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்தனர்.
நிச்சயாதார்த்த விழாவிற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் அருமுளை கிராமத்தில் இருந்து, மொத்தம் 15 டிராக்டர்களில் 500 வகையான சீர்வரிசை தட்டுகளுடன் அமர்க்களமாக கிளம்பி வந்தார்கள்.. அப்போது வாணவேடிக்கை சத்தம், சுற்றுவட்டார பகுதிகளில் எதிரொலித்து கொண்டேயிருந்தது..
பிரம்மாண்டம்: மாப்பிள்ளையின் சொந்த ஊரான அருமுளையில் இருந்து தாம்பூல தட்டுகளில் பல்வேறு வகையான மலர்கள், பழங்கள், பலகார வகைகள் என சுமார் 500 சீர்வரிசைகள் நிரம்பியிருந்தன.. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாண வேடிக்கை, பட்டாசுகள் சத்தம் முழங்கி கொண்டேயிருந்திருக்கிறது.. நீண்ட வரிசையில் இந்த சீர்வரிசை ஊர்வலம் சென்றிருக்கிறது..
3000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில், அத்தனை பேருக்குமே அறுசுவை உணவு பரிமாறப்பட்டது... பிரமாண்ட முறையில் நடந்த நிச்சயத்தார்த்த வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.
தாய்மாமன்: வழக்கமாக சீர்வரிசை என்றாலே தாய்மாமன்தான் கண்முன்னே வந்து நிற்பார்.. ஆனால், இங்கு வருங்கால கணவனே, மாமனாகி விட்டாரே என்று கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.. அதுமட்டுமல்ல, நிச்சயதார்த்தமே இப்படியென்றால், கல்யாணம் எப்படி இருக்க போகிறதோ? என்ற ஆர்வத்தையும் ஒரத்தநாடு கிளப்பிவிட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications