ஒரத்தநாடு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
தஞ்சாவூர்: பாப்பாநாடு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சை மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரின்பேரில் கவிதாசன், திவாகர், பிரவீன், வேல்முருகன் கைது செய்யப்பட்டனர். சிறார்கள் 2 பேர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த 22 வயது இளம் பெண்ணை, அவரது ஆண் நண்பர், 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடா்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் (25), திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 4 பேருடன், வேல்முருகன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
அதன் அடிப்படையில், வேல்முருகன் மற்றும் 17 வயது சிறுவனை ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, வேல்முருகன் திருச்சி மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் தஞ்சாவூர் சிறார் இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவரும், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் வேறு யாரும் வருகிறார்களா என்று கண்காணித்து குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், பாப்பாநாடு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் அளித்த பரிந்துரையின் பேரில் கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications