ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகனும்.. சொல்கிறார் கீ.வீரமணி!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அதேபோல் என்எல்சி விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கி.வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் சூத்தாட்டத்திற்கு தடை விதித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் முறை அனுப்பி வைக்கப்பட்ட போது உரிய விளக்கம் கேட்டு அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். பின்னர் விளக்கம் அளித்து மசோதா அனுப்பப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார்.

ஆளுநர் மீது விமர்சனம்
இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, அமமுக உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி விவகாரம் தமிழ்நாடு அரசியல் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் அனுப்ப முடிவு
இதனையடுத்து சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்
இந்த நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். மீண்டும் தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டப்பிரிவு 200வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்று தெரிவித்தார்.

என்எல்சி விவகாரம்
இதனைத் தொடர்ந்து என்எல்சி விவகாரம் பற்றிய கேள்விக்கு, என்எல்சி விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழ்நாடு அரசு செய்யும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications