டெல்டாவில் மீண்டும் பலத்த மழை.. நிவாரண பணிகள் தடைபட்டது.. மக்கள் கலக்கம்!
கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.
Recommended Video

தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.
கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம் பெரிய பேரிடரை சந்தித்துள்ளது, டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது டெல்டாவில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது.

எங்கு பெய்கிறது
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. காலையில் சாரல் மழையாக தொடங்கியது இப்போது கனமழையாக மாறியுள்ளது.

கனமழை
புயல் அதிகம் பாதித்த பட்டுக்கோட்டை, திருவாரூர், முத்துப்பேட்டையில் பலத்த மழை பெய்வதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். புதுக்கோட்டையில் கனமழை பெய்கிறது. காரைக்காலிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இப்போதுதான் பல இடங்களில் மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியது.

மிக மோசம்
கஜா புயல் நிவாரண பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்கிறது. இந்த நிலையில் மழை காரணமாக பல இடங்களில் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

என்ன காரணம்
நேற்றுதான் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications