பாஜகவில் தேடப்படும் குற்றவாளிகள்.. அண்ணாமலை ஒரு அரைக்காடு.. கி.வீரமணி அட்வைஸ்..!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளிகள் அதிகம் உள்ளவர்களின் கட்சியாக பாஜக இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பிடக்கோரியும், சனாதனத்துக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து பேசி வரும் கருத்துகளை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் மற்றும் பாபநாசம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கும்பகோணம் வந்தார்.

அண்ணாமலை மீது விமர்சனம்

அண்ணாமலை மீது விமர்சனம்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சனாதன தர்மம் அனைவருக்கும் சமம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கீ. வீரமணி, சனாதன தர்மம் என்றால் என்ன என்பது குறித்து சரியாக படிக்காத அரைக்காடு தான் அண்ணாமலை என்று விமர்சித்தார்.

ஆதாரத்துடன் விளக்கிய கி.வீரமணி

ஆதாரத்துடன் விளக்கிய கி.வீரமணி

இதனைத்தொடர்ந்து சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து 1916ஆம் ஆண்டு பனாரஸ் கல்லூரி நிர்வாகிகளால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள வரிகளை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி பதிலளித்தார். சனாதனத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. இதனை அண்ணாமலை படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக நிர்வாகிகள் யார்?

பாஜக நிர்வாகிகள் யார்?

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளிகளில் பலர் பாஜகவில் நிர்வாகிகளாக உள்ளனர். பாஜக எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அதிமுகவைச் சேர்ந்த பொன்னையனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். அதேபோல் பாஜக ஆட்சியில் உள்ள விலைவாசி பட்டியலை பார்த்துவிட்டு பேசட்டும் என்று விமர்சித்தார்.

கனவு காணட்டும்

கனவு காணட்டும்

தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அண்ணாமலை பேசியது என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். அண்ணாமலை நன்றாக கனவு காணட்டும் என்று கி.வீரமணி பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+