5.. மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்த அருமையான திட்டங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் உதவி தொகைகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இதற்கு http://www.tncsevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களை இப்போது பார்ப்போம். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 1.20 கோடி நிதியினை அரசு ஒதுக்கி உள்ளது.

இதேபோல் உயர்கல்வி பயிலும் 1000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா ரூ.14000 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் 1.40 கோடி லட்சத்தை அரசு ஒதுக்கி உள்ளது.
ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு 500 பயனாளிகளுககு இந்த நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 4.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியமும் 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு திட்ட உதவிகளை பெற மாற்றுத்திறனாளிகள் http://www.tncsevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் , கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் , உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடன் மானிய வழங்கும் திட்டம் , அனைத்து வகை திருமண நிதியுதவி தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய 5 திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://www.tncsevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் , கைப்பேசி எண், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் இணைய சேவையில் தேவைப்படும் இதர ஆவணங்களுடன் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications