அழுக்குத் துணிக்குள் மறைக்கப்பட்ட லஞ்சப் பணம்.. பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ. 6.54 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு வந்த புகாரின்பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 6.54 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் முதல் பொறியாளர் வரை அதிகாரிகள் பலர் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வருபவர் குமரன். பட்டுக்கோட்டை நகராட்சியின் அவசரக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முடித்துச் சென்ற பிறகு நகராட்சி அதிகாரிகளை வைத்து குமரன் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் வீட்டுமனை சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசராணையை முடித்தவுடன் ஒவ்வொரு அதிகாரிகளிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சோதனையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இடத்திற்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சப் பணத்தை பெற்று மறைத்து வைத்திருந்த பொறியாளர் மனோகரனிடம் இருந்து 84 ஆயிரம் ரூபாய், ஒப்பந்ததாரர் எடிசன் என்பவரிடம் இருந்து 66 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், போலீசாரை கண்ட நகராட்சி கமிஷனர் குமரனின் டிரைவர் வெங்கடேஷன் நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாயை துாக்கி வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கமிஷனர் குமரன் தனது 5 லட்சம் ரூபாயை ஓட்டுநரின் அழுக்குத் துணிகளுக்குள் மறைத்து வைக்க கூறியது தெரியவந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அந்தப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, நகராட்சி ஆணையர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன், டிரைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications