Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சாவூர் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி வீட்டிற்கு போன மதன்.. விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி மற்றும் கைதான மதன் குமார் இருவரும் காதலித்து வந்தார்களாம். இந்நிலையில், நேற்று மாலை மதன், ரமணியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பெண் தர பெற்றோர் மறுத்துவிட்டார்கள்.. அந்த ஆத்திரத்தில் இப்படி வகுப்பறையில் ரமணியை கொன்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை வழக்கம் போல் பள்ளியில் ஆசிரியர்கள் படம் நடத்திக் கொண்டிருந்தனர். அதேநேரம் பள்ளியில் பாடம் நடத்தாத நேரங்களில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கவும் ஆசிரியர்களுக்கான அறை உள்ளது. அந்த அறைக்கு சென்ற இளைஞர் மதன் என்பவர், அங்கிருந்த 26 வயது ரமணி எனும் ஆசிரியையை கழுத்தில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பள்ளி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

thanjavur teacher crime


உடனடியாக அவரை மீட்ட சக ஆசிரியர்கள், அருகில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஆசிரியை ரமணி இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறிது தகவல் அறிந்து விரைந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியையை கத்தியால் தாக்கி கொலை செய்த மதன் என்ற இளைஞரை கைது செய்தனர்.

thanjavur teacher crime

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து என்பவருடைய மகள் தான் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்திருக்கிறார்

இதற்கிடையில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகனான மதன் (30) ஆசிரியை ரமணியை காதலித்து வந்தாராம். இருவருமே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மகன் மதனுக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ரமணியை மதன் காதலிப்பதை அறிந்து , அவரது வீட்டிற்கு பெண் கேட்டு நேற்று மாலை சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறிவிட்டாராம். இதனால் ரமணியின் தந்தை முத்து, பெண் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மதன், இன்று காலை பள்ளியில் புகுந்து கத்தியால் குத்திக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+