நிறைமாத கர்ப்பிணி.. வயிற்றில் தீவைத்து எரித்த கொடூர புஷ்பவல்லி.. தஞ்சையில் ஷாக்!
நிறைமாத கர்ப்பிணி வயிற்றில் தீ வைத்த மாமியார் கைது செய்யப்பட்டார்
தஞ்சை: நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மாமியார் புஷ்பவல்லி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் சூரியன்பட்டி பகுதியை சேர்ந்தவர் புஷ்பவல்லி.. இவரது மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வரும் என தெரிகிறது.. மருமகளை வரதட்சணை கேட்டு மாமியார் கொடுமைபடுத்தி வந்துள்ளதாகவும் இது தொடர்பாகவே பெரும்பாலான பிரச்சனைகள் குடும்பத்தில் வந்து போயுள்ளன என்றும் கூறப்படுகிறது.
அதுபோலவே இன்றும் மாமியார் - மருமகள் இடையே சண்டை வந்துள்ளது.. இதில் ஒரு கட்டத்தில் ஆவேசமான மாமியார் புஷ்பவல்லி, மருமகளின் வயிற்று பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வலியால் கர்ப்பிணி பெண் அலறி துடிக்க, அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பலத்த தீக்காயத்துடன் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. உடனடியாக பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.. வயிற்று பகுதியில் தீ வைத்து எரித்ததால் வயிற்றில் இருந்த குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அப்பெண்ணும், அவரது குழந்தையும் ஐசியூவில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொலை முயற்சியில் ஈடுபட்ட மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை முடிவில்தான் இவர்களுக்குள் எதனால் சண்டை வந்தது என்பதும், வரதட்சணை கொடுமைதான் இதற்கு முக்கிய காரணமா என்பதும் தெரியவரும்.
நிறைமாத கர்ப்பிணி மருமகள் வயிற்றில் மாமியார் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் தஞ்சாவூரில் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications