பெட்ரோலுடன் தண்ணீர்.. தஞ்சையில் வாகன ஓட்டிகளை கலங்கடித்த பெட்ரோல் பங்க்.. என்ன நடந்தது?
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வினியோகிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு சென்ற வாகனங்கள் எல்லாம் சிறிது தூரம் சென்ற பின் பழுதாகி நின்றதால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் - கும்பகோணம் முக்கிய சாலையில் திருவலஞ்சுழி பகுதியில் எச்பி பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கை எம்கேவி என்ற ஏஜெண்ட் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்று காலையிலும் இந்த பெட்ரோல் பங்கில் வழக்கம்போல் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டனர்.

பெட்ரோல் நிரப்பிவிட்டு சிறிது தூரம் சென்ற பின் இருசக்கர வாகனங்கள் திடீரென பழுதாகி நின்றுள்ளது. ஏன்? எதனால்? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் பலரும் இப்படி தவித்துள்ளனர். இப்படி ஒவ்வொரு வாகன ஓட்டிகளாக அந்த சுற்றுவட்டாரப் பகுதியில், 20க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு இப்படி பழுதாகி நின்ற இருசக்கர வாகனங்கள் அனைத்தும் எச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து பழுதாகி நின்ற 20-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் அந்த பெட்ரோல் பங்கிற்கே வந்தனர். தொடர்ந்து இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அங்கு கூடியிருந்த வாகன ஓட்டிகள் வாட்டர் கேனில் பெட்ரோலை நிரப்புமாறு கூறி அதனை வீடியோவாகவும் எடுத்தனர்.
இதில் வாட்டர் கேனில் வந்த பெட்ரோலில் பாதி தண்ணீர் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் இது பற்றி விளக்கம் அளிக்குமாறு கூறினர். ஆனால் பங்க் நிர்வாகத்தினர் இதற்கு சரியான விளக்கம் அளிக்காததால் அவர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெட்ரோல் பங்க்கில் பரபரப்பு ஏற்பட்டது.
பலரும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று வாகனத்துடன் தவித்ததாகவும், வாகனத்தில் என்ன பிரச்சினை என்று தெரியாமல் மன உலைச்சலுக்கு ஆளானதாவும் கூறினர். இதற்கிடையே சுவாமிமலை போலீசார் அங்கு வந்தனர். போலீசார் வாகன ஓட்டிகளிடமும், பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினரிடமும் இது பற்றி முழுமையாக கேட்டறிந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications