Mystery: மர்மங்கள் நிறைந்த நாச்சியார்கோயில் கல் கருடர்! இன்று வரை விலகாத ஆச்சரியம்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: நாச்சியார் கோயிலில் கல் கருடர் சிலையில் பல மர்மங்கள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கல் கருடரின் எடை அதிகரித்துக் கொண்டே போகுமாம்.

உலக பிரசித்திப் பெற்ற நாச்சியார்கோயிலில் திருநறையூர் நம்பி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கல் கருடச் சேவை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஊரில் விளக்குகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளுக்கு புவிசார் குறியீடு உள்ளது. இந்த கோயில் கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பாதையில் 10 கிமீ தொலைவில் உள்ளது.

108 வைணவ திருத்தலங்கள்

108 வைணவ திருத்தலங்கள்

108 வைணவ திருத்தலங்களில் 20 ஆவது தலமாக இது விளங்குகிறது. பங்குனி மாதத்தில் இந்த நம்பி கோயிலில் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற அவருக்கு மகளாக மகாலட்சுமி திரு அவதாரம் எடுத்தார். அவரை மனித உருவில் வந்து சீனிவாசப் பெருமாள் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

 தாயாருடன் பெருமாள்

தாயாருடன் பெருமாள்

வழக்கமாக பெருமாள் கோயிலில் இருக்கும்படி தாயாருக்கு தனி சன்னதி எல்லாம் இல்லை. திருமண கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார்கள். இந்த கோயிலில் ஒரே கல்லால் ஆன மிகப் பெரிய கல் கருட பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆறுகால பூஜைகள் செய்யப்படுகின்றன.

 பங்குனி மாதம்

பங்குனி மாதம்

பங்குனி மற்றும் மார்கழி மாதம் என இரு முறை மட்டுமே இந்த கல் கருடர் அவரது சன்னதியை விட்டு வெளியே வருவார். அப்போதுதான் அந்த மர்மம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது தெரியவில்லை. இந்த கருடர் ஒரே கல்லால் செய்யப்பட்டது என்பதால் இது கல் கருடர் ென அழைக்கப்படுகிறது.

 எடை கூடும் கல் கருடர்

எடை கூடும் கல் கருடர்

பங்குனி, மார்கழி மாதத்தில் வெளியே கொண்டு வரப்படும் கல் கருடரை முதலில் 4 பேர் மட்டுமே தூக்கி வருவர். பின்னர் வெளியே வர வர அவரது எடை கூடி கொண்டே போதும். ஆரம்பத்தில் 4 பேர் தூக்கி வரும் நிலையில் அந்த எண்ணிக்கை 8, 16, 32, 64, 128 பேர் வரை தூக்கும் அளவுக்கு கருடனின் எடை அதிகரிக்கும்.

மர்மம் புரியாத நிலை

மர்மம் புரியாத நிலை

அதாவது அந்த கருடரை தூக்கும் நபர்களின் எண்ணிக்கை டபுள் ஆகி கொண்டே இருக்கிறது. அது போல் உற்சவம் முடிந்து வெளியே இருந்து அவரது சன்னதிக்கு கல் கருடரை தூக்கச் சென்றால் 128 பேரிலிருந்து 4 பேராக எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கும். இந்த எடை கூடுதலும் குறைதலும் எப்படி நடக்கிறது என்பது இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு தெய்வ சக்தி காரணமா இல்லை, அந்த கல் அவ்வாறு வடிவமைக்கப்பட்டதா என தெரியவில்லை. அது போல் எடை கூடுவது குறைவது போன்று கல் எப்படி வடிவமைக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு வேளை காற்று காரணமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த மர்ம அல்லது ஆச்சரிய சம்பவத்தை காண ஆண்டுதோறும் பக்தர்கள் இந்த திருத்தலத்திற்கு உற்சவத்தின் போது வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+