ப்ளான் பண்ணி பண்ணலைங்க.. அதுவா எதார்த்தமா நடந்தது! அலர்ட் ஆன வைத்தியலிங்கம்! ஆனால் சின்னம்மாவாம்!
தஞ்சாவூர் : இன்று சசிகலாவை சந்தித்தது எதார்த்தமான சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் கூறினாலும், வார்த்தைக்கு வார்த்தை புரட்சித் தாய் எனவும், சின்னம்மா எனவும் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற திருமண விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என கூறிக் கொள்ளும் சசிகலா வந்திருந்தார்.
அதே நிகழ்ச்சியில் விழாவில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும் பங்கேற்றார்.அப்போது அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர். வைத்தியலிங்கத்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சசிகலா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சசிகலாவுடன் சந்திப்பு
மேலும் சாக்லேட்டுகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கடந்த சில மாதங்களாகவே பின்னடைவை சந்தித்து வரும் ஓபிஎஸ் ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்ற தயார் என தெரிவித்திருந்த நிலையில் அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கம் சசிகலாவை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இதனால் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு விரைவில் இருக்கும் என்கின்றனர் தேனி வட்டாரங்கள்.

எதார்த்தமான சந்திப்பு
இந்நிலையில் இன்று சசிகலாவை சந்தித்தது எதார்த்தமான சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் கூறினாலும், வார்த்தைக்கு வார்த்தை புரட்சித் தாய் எனவும், சின்னம்மா எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இன்று புரட்சி தாய் சின்னம்மா சந்தித்தது எதார்த்தமான சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது.

சசிகலா தினகரன்
அரசியல் ரீதியான சந்திப்பாக இருந்தால் கண்டிப்பாக அனைவரிடமும் தகவல் கொடுத்து தான் சந்திப்போம். அதிமுகவில் இருந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் அதில் சசிகலா தினகரன் ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சியை அழிக்க நினைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆணவப் போக்கோடு நடந்து கொள்கிறார். அவரது ஆணவ போக்குக்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எடப்பாடி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சியை அழிக்க நினைக்கிறார்." என பேசினார். அதே நேரத்தில் ஓபிஎஸ் சசிகலாவை சந்திப்பதற்கான முன்னேற்பாடு தான் இந்த சந்திப்பு என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications