“கல்தா” கொடுத்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் கைது.. இன்னொருவருக்கு வலை வீசும் போலீசார்!
தஞ்சாவூர்: ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தஞ்சையில் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள். இவர்கள் ஹெலிகாப்டரில் பந்தாவாக வலம் வந்ததால் "ஹெலிகாப்டர் சகோதரர்கள்" என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்களை இவர்கள் செய்து வந்தனர்.

சொந்தமாக ஹெலிகாப்டர் மற்றும் ஹேலிபேட் வைத்திருந்த இவர்கள், பாஜக பிரமுகர்களுடன் நெருக்கமாக இருந்து வந்தனர். இருவரும் பாஜகவில் முக்கிய பொறுப்பையும் வகித்து வந்தனர். தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என அறிவித்து, வசதியானவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தனர் இந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்.
பணம் வசூல் செய்வதற்காக தனியாக ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்கும் பெரும் தொகையை கமிஷனாக வழங்கி கோடிக் கணக்கில் முதலீட்டை திரட்டினர். ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் கும்பகோணம், தஞ்சாவூர் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பணம் சரியாகக் கொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. பணத்தை முதலீடு செய்தவர்கள் பலரும் தாங்கள் பணம் கொடுத்த ஏஜென்ட்டுகளை நெருக்கத் தொடங்கினர். இதையடுத்து ஏஜென்ட்டுகள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தலைமறைவானதால் முதலீடு செய்தவர்கள் ஷாக் ஆகினர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பலரும் மாவட்ட தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது பண மோசடி புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட சிலரை கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
அண்மையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கணேஷ், சுவாமிநாதன் மீது சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையின் மேலாளர் போலீசில் புகார் அளித்தார். கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த அவர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே நிதி நிறுவன மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது மீண்டும் சென்னையில் மோசடி புகார் எழுந்த நிலையில், இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் 28.5 கிலோ தங்க காசுகள் வாங்கி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தஞ்சையில் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கணேஷை தேடி வருவதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications