பட்டா மாறுதல்.. தஞ்சை விஏஓ ஆபீஸ் கிட்ட மறைந்து கொண்ட ஆபீசர்ஸ்.. வசமாக சிக்கி அசிங்கப்பட்டு போன வள்ளி

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: ஒரே நாளில் அரசு அதிகாரிகள் அடுத்தடுத்து சிக்கி கைதானது, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போலீசார் கைது செய்து, விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

தஞ்சையை அடுத்துள்ளது கொல்லாங்கரை என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி பெயர் சுகந்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் இறந்து விடவும், தன்னுடைய கணவர் பெயரிலுள்ள சொத்துகளை, தன்னுடைய பெயருக்கு மாற்றம் செய்ய சுகந்தி முடிவு செய்தார்.

patta change vao

இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, கொல்லாங்கரை விஏஓ வள்ளி என்பவருக்கு சுகந்தி விண்ணப்பம் செய்தார். அத்துடன், இந்த விண்ணப்பம் தொடர்பாக சுகந்தியை நேரில் சந்திக்கவும் சென்றார்..

சுகந்தி: ஆனால், ஒவ்வொரு முறையும் சுகந்தியை, விஏஓ வள்ளி அலைக்கழித்ததாக தெரிகிறது.. கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து பல நாட்கள் காத்திருந்தாலும்கூட, பட்டா மாற்றம் செய்வதற்கான பணியை மட்டும் கிடப்பிலேயே போட்டு வைத்திருந்தாராம் வள்ளி.

இதற்கு பிறகு, ரூ.3 ஆயிரம் லஞ்சம் தந்தால், பட்டாவை மாற்றித்தருவதாக வள்ளி சொல்லியிருக்கிறார்.. ஆனால் லஞ்சம் கொடுக்க சுகந்திக்கு விருப்பம் இல்லை என்பதால், தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் தந்தார்.. போலீசாரும், உடனடியாக கொல்லாங்கரை கிராமத்துக்கு விரைந்து வந்து, விஏஓ ஆபீசுக்கு அருகிலேயே மறைந்திருந்தனர்.

விஏஓ: லஞ்ச ஒழிப்பு போலீசார் தந்த ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை சுகந்தியிடம் தந்தார் வள்ளி.. அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து வள்ளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இப்போது கும்பகோணம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் வள்ளி.

இதுபோலவே, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தெற்குசத்திரத்தைச் சேர்ந்தவர் வண்டிக்கார மாரிமுத்து, 64. இவரது நிலத்திற்கு விவசாய மின் இணைப்பு பெற சிவகிரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரை அணுகினார்... அப்போது, முத்துக்குமாருடன், போர்மேன் மருதுபாண்டி 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்கள்.. இதையடுத்து, லஞ்சம் பெற்ற முத்துக்குமார், மருதுபாண்டி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களது வீடுகளிலும் சோதனை நடந்தது.

கவலை: இதேபோல, சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு, அங்கிருந்து கணக்கில் வராத, 3.36 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.. இடைத்தரகராக செயல்பட்ட போக்குவரத்து கழக ஊழியரிடம் இருந்து இந்த பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த அனைத்து சம்பவங்களும் நேற்று ஒரே நாளில் நடந்துள்ள நிலையில், லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை நினைத்து பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு, அங்கிருந்து கணக்கில் வராத, 3.36 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.. இடைத்தரகராக செயல்பட்ட போக்குவரத்து கழக ஊழியரிடம் இருந்து இந்த பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த அனைத்து சம்பவங்களும் நேற்று ஒரே நாளில் நடந்துள்ள நிலையில், லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை நினைத்து பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+