தஞ்சை சுவாமிமலையில் பயபக்தியுடன் தரிசனம்.. தமிழக சனாதன தர்ம யாத்திரையில் பவன் கல்யாண் புதிய திட்டம்
தஞ்சை: ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியிருக்கிறார். இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்ற பவன் கல்யாணுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிநாத சுவாமி தரிசனம் செய்த பவன் கல்யாண், கோவில் மண்டபத்தில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார்.
கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன தர்ம யாத்திரை தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.அதன்படி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியிருக்கிறார். பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். பிப்ரவரி 12 ஆம் தேதியான நேற்று கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று தனது சனாதன தர்ம பயணத்தை தொடங்கினார் பவன் கல்யாண். இதேபோல் கேரளமாநிலம் கொச்சி அருகே உள்ள அகஸ்திய மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

இதனிடையே ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்றார்.அங்கு பவன் கல்யாணுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிநாத சுவாமி தரிசனம் செய்த பவன் கல்யாண், கோவில் மண்டபத்தில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று தற்போது சுவாமி தரிசனம் செய்து. ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு வந்த பவன் கல்யாணுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பவன் கல்யாண் வந்துள்ளதை கேள்விப்பட்டு, கும்பகோணம் தனியார் கல்லூரியில் பயிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பவன் கல்யாணை காண கோவிலில் குவிந்தனர். இதனிடையே தமிழ்நாடு வந்துள்ள பவன் கல்யாண் சனாதன தர்ம யாத்திரையின் ஒரு பகுதியாக முருகனின் அறுபடை வீடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதனம், ஆன்மீகம் போன்ற விஷயங்களில் மிகவும் தீவிரமாக பின்பற்றி வருகிறார்.திருப்பதி விவகாரத்தில் வெகுண்டெழுந்து கருத்து தெரிவித்து வந்த பவன் கல்யாண், துணை முதல்வர் உதயநிதிக்கு ஒருமுறை கடுமையாக பதிலடி கொடுத்தார்.
திருப்பதியில் பவன் கல்யாண் உதயநிதியின் பெயரை குறிப்பிடாமல் கூறும் போது, சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி.. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது." என்று கூறியிருந்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications