டிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு!
அரசு பள்ளி ஆசிரியை மாரடைப்பால் மரணமடைந்தார்
Recommended Video
தஞ்சை: டிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம் என்ற தகவலை கேட்டதுமே அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் பள்ளி ஆசிரியை லதா!
திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டீச்சராக வேலை பார்ப்பவர் லதா. இவருக்கு 49 வயதாகிறது.

கல்வி துறையில் பணி நிரவல் அடிப்படையில் கவுன்சிலிங் நடந்தது. இதில், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் மட்டும் 12 ஆசிரியர்கள் பணிநிரவல் அடிப்படையில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். அப்போது, பணிநிரவல் அடிப்படையில் மூத்த ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், பணிநிரவல் அடிப்படையில் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வருகிற 12-ம் தேதி அதாவது நாளை கண்டிப்பாக பணியில் சென்று சேர வேண்டும் என்றும், இப்போது வேலை பார்த்து வரும் பள்ளிகளில் இருந்து அவர்களை விடுவித்து தலைமை ஆசிரியர் அதற்கான ஆர்டர் வழங்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஆசிரியை லதா பட்டுக்கோட்டை பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அவருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதை கேட்டு லதா அதிர்ச்சி அடைந்ததுடன், அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள், லதாவை உடனடியாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு வந்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் லதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லதா உயிரிழந்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணியிட மாறுதல் ஆணை, ஆசிரியரின் உயிரை பறித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்களும் குற்றம்சாட்டி வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications