ஐடி சோதனைக்கு சொல்லிட்டா வருவாங்க.. கணக்கு முறையாக இருந்தால் காட்டுங்க.. தடதடக்கும் சீமான்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: வருமான வரி சோதனைக்கு திடீர் என்றுதான் வருவார்கள். அவர் வீட்டுக்கு சோதனைக்கு வருகிறோம்.. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று சொல்லிவிட்டா வருவார்கள். கணக்கு சரியாக இருக்கிறது என்றால் சோதனை நடத்தி விட்டு போங்க என்று அனுமதிக்கனும் என சீமான் கூறினார்.

அரசே வந்து தெருவெருக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து குடிக்க அனுமதித்து விட்டு பிறகு சாவு ஏற்படுகிறது என்று சொல்கிறது. குடித்தவுடன் செத்து போயிடுறாங்க.. சிலர் 10 ஆண்டுகளில் மெது மெதுவாக சாகுகிறார்கள். எப்படியும் சாகிறார்கள்தானே. கொடிய விசத்தை கொடுக்கிறோம் என்ற வருத்தம் இருக்க வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவர்கள் பேசியது எல்லாம் உள்ளது.

Senthil Balaji has to show if the account is correct: Seeman about IT Raid

நாங்கள் வந்தால் முதல் கையெழுத்தே அதுதான் என்று. ஏன் கருணாநிதி பேசியதே இருக்கிறது. ஸ்டாலின் பேசியதும் உள்ளது. கனிமொழி பேசியதும் இருக்கு. ஆனால், தற்போது மதுஒழிப்பு பற்றி பேசுவதே இல்லை. மக்களுக்கு இடையேயும் ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும். மதுவை தவிர்க்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் வெளிநாட்டு மது விற்கப்படுகிறது. ஆனாலும் கள்ளும் விற்கிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கூட விற்கப்படுகிறது.

ஏன் அருகில் இருக்கும் புதுவையில் கூட கள்ளுக்கடை இருக்கிறது. சாராயத்தை தேடி மக்கள் செல்வதற்கு காரணம் டாஸ்மாக்கில் விலை அதிகாமக இருக்கிறது என்று சொல்கிறார்கள். வருமான வரி சோதனை குறித்து பேசிய சீமான், " இரண்டு பக்கமும் பிழை இருக்கிறது. வருமான வரி அதிகாரிகள் பை எடுத்துக் கொண்டு சுவர் ஏறி குதித்ததாக சொல்கிறார்கள். வருமான வரி அதிகாரி பையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதில் சந்தேகம் வரும்.

இதை திமுக தரப்பில் சொல்கிறார்கள். எங்களுக்கு உரிய பாதுகாப்பை தரவில்லை என்று வருமான வரி சோதனை அதிகாரிகள் சொல்லும் போது, அங்கே இருக்கும் எஸ்.பி என்ன சொல்கிறார் என்றால் எங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்கிறார். வருமான வரி சோதனைக்கு வருகிறவர் சொல்லிவிட்டு வந்தால் நீங்கள் சொல்லிவிட மாட்டீர்களா... அவர் என்ன ஐபிஎஸ் படித்தார் என்று தெரியவில்லை.

Senthil Balaji has to show if the account is correct: Seeman about IT Raid

வருமான வரி சோதனைக்கு திடீர் என்றுதான் வருவார்கள். அவர் வீட்டுக்கு சோதனைக்கு வருகிறோம்.. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று சொல்லிவிட்டா வருவார்கள். இதுவரைக்கும் அப்படியா நடந்து இருக்கு... நான் என்ன சொல்கிறேன் என்றால் கணக்கு சரியாக இருக்கிறது. முறையாக நிர்வாகம் பண்ணுகிறோம் என்றால் சோதனை நடத்தி விட்டு போங்க என்று செந்தில் பாலாஜி அனுமதிக்கனும்.

எல்லோரது வீடுகளில் சோதனை நடக்கிறது. அவர்கள் எல்லோரும் தொண்டர்களை கூட்டிக் கொண்டு வைத்து தகராறு பண்ணினால் எங்கேயுமே நடவடிக்கை எடுக்க முடியாது. விஜய் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அவரது ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டு இருந்தால் எப்படி உள்ளே போய் சோதனை நடத்த முடியும். விஜய் சோதனை நடத்த அனுமதி கொடுத்தார். சோதனை நடத்தி விட்டு சென்றார்கள். அப்படித்தான் செய்ய வேண்டும். ஏதோ அதிகாரமும் அதிகாரமும் மோதுது. பேய்க்குக்ம் பேய்க்கும் சண்டை மாதிரி நாம வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.. இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+