2 பேர் பலியான விவகாரத்தில் அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’.. மதுவில் கலந்திருந்த சயனைடு! கொலையா? தற்கொலையா?
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து பலியான விவகாரத்தில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இருவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு எதிராக அரசு அனுமதி பெற்ற பார் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூர், கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான குப்புசாமி (68), விவேக் (36) ஆகியோர் அங்கு மது குடிக்கச் சென்றனர்.

டாஸ்மாக் கடை 12 மணிக்கு தான் திறக்கப்படும் என்பதால், அருகில் இருந்த பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளனர். மது அருந்தி விட்டு வந்த குப்புசாமி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி அந்த இடத்திலேயே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குப்புசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு மது அருந்திய விவேக்கும் மயங்கி விழுந்தார். இதனையறிந்த அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விவேக். பாரில் மது அருந்திய 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலால் அதிகாரி பழனிவேல், வட்டாட்சியர் சக்திவேல், டாஸ்மாக் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் உள்ளிட்டோர் டாஸ்மாக் பார் இருக்கும் இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அனுமதி பெற்று இயங்கி வந்த பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாருக்கு சீல் வைத்த நிலையில் அதற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் பார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பாரில் இருந்த மதுபானங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து பலியான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மதுவில் சயனைடு கலந்திருந்ததால் தான் இருவரும் உயிரிழந்துள்ளது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்த நிலையில், அதில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கொல்ல மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications