ஊரை சுற்றி வந்த சொகுசு கார்.. திடீர்னு சத்தம்.. விரட்டி போய் திறந்து பார்த்தால்.. "குபீர்" அதிர்ச்சி
6 ஆடுகள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்
திருவாரூர்: கார் ஒன்றிலிருந்து திடீரென சத்தம் கேட்டுள்ளது.. அதனால், அந்த கிராம மக்கள் காரை விரட்டி சென்று பார்த்தபோது அதிர்ச்சியாகி உறைந்துவிட்டனர்.
திருவாரூர் மாவட்டம் விவசாய பகுதி.. தற்போதைய காலத்தில் விவசாயம் பொய்த்து போய் வந்தாலும், கால்நடை வளர்ப்பு இவர்களுக்கு கை கொடுத்து உதவி வருகிறது.
அந்த வகையில், கோட்டூர் அருகே சோமசேகரபுரம் என்ற கிராமம் உள்ளது.. கடந்த சில மாதங்களாகவே, இந்த கிராமத்தில் இந்த கால்நடைகள் திருடு போக ஆரம்பித்துள்ளன..

அதிர்ச்சி
இந்த கால்நடைகளை நம்பிதான் தங்கள் வாழ்க்கையே இருப்பதால், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. அதனால் மேய்ச்சலுக்கு சென்றாலும், இவர்களும் கூடவே சென்று அவைகளை ஓட்டி வர ஆரம்பித்தனர். ஆனாலும் கால்நடைகள் திருடு போயின.. அப்போதுதான் இரவு நேரங்களில் இப்படி திருட்டு நடப்பதே அவர்களுக்கு தெரியவந்தது.

சத்தம்
ஆனால் யார் திருடுகிறார்கள் என்பது தெரியாமல் தவித்து வந்தனர்.. இந்தநிலையில், அதே கிராமத்திற்கு ஒரு சொகுசு கார் வந்துள்ளது.. அந்த கார் கிராமத்தையே சுற்றி சுற்றி வந்து, கடைசியில் குபேந்திரன் என்பவர் வீட்டில் நின்றது.. பிறகு சிறிது நேரம் கழித்து அந்த கார் கிளம்பியது.. அப்போதுதான், ஆடுகள் சத்தம் போடுவது போல அந்த பகுதி மக்களுக்கு கேட்டுள்ளது. எனவே பின்னாடியே மக்கள் விரட்டி செல்வதற்குள் அந்த கார் வேகமாக சென்றுவிட்டது.

தப்பி ஓட்டம்
எனினும், ஆடுகள் கத்தியது போல இருந்ததே என்ற சந்தேகத்தில் விரட்டி கொண்டே ஓடியுள்ளனர்.. அப்போது, அந்த கார் மன்னார்குடி ரோட்டில் இரட்டை புலி என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தது.. வேகமாக ஓட்டிவந்ததில், ஏதோ விபத்து ஏற்பட்டுள்ளது.. அதனால் காரை தொடர்ந்து ஓட்ட முடியாமல், நடுவழியிலேயே நின்றுவிட்டது.. அதற்குள் பொதுமக்கள் விரட்டி வருவதை பார்த்ததும், காருக்குள் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

குபேந்திரன்
இதனால் கார் மட்டும் நடுரோட்டில் இருந்தது.. அருகில் சென்றபோது, முன்சீட்டிலும், பின்சீட்டிலும் யாருமே இல்லை.. பிறகுதான், காரின் டிக்கியை திறந்து பாரத்தனர்.. மொத்தம் 6 ஆடுகள் உள்ளே இருந்தன.. 3 ஆடுகள் குபேந்திரனுக்கு சொந்தமானது.. மற்ற 3 ஆடுகள் அதே கிராமத்தில் இருந்து திருடியுள்ளனர்.. இதையடுத்து, ஆடுகளை எடுத்து கொண்ட பொதுமக்கள், கோட்டூர் போலீசுக்கு தகவல் தந்தனர்.

கோரிக்கை
அப்போதுதான், இத்தனை நாளும் கால்நடைகளை திருடி சென்றது இந்த கும்பல்தான் என்றும், இதற்காகவே சொகுசுகாரை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.. மர்மநபர்கள் தொடர்ந்து நைட் நேரத்திலேயே வந்து செல்வதால், அந்த பகுதியில் ரோந்து பாதுகாப்பு வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. சத்தம் இருந்த 3 ஆடுகள், உட்பட அருகே மற்ற வீடுகளில் இருந்த 3 ஆடுகள் என மொத்தம் 6 ஆடுகளை மர்ம நபர்கள் கார் டிக்கியில் அடைத்து கடத்தி செல்ல முயன்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications