தஞ்சாவூரில் "மஞ்சள் கயிறுடன்" நிற்பது யாருங்க? கையில் தாலியுடன் தலைதப்பிய ஜோடி.. தஞ்சை கோயிலில் பரபர
தஞ்சாவூர்: காதலர் தினமான இன்று, தஞ்சை பெரிய கோவிலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. என்ன காரணம் தெரியுமா?
காதலர் தினம் என்றாலே சில இந்து அமைப்புகளுக்கு அலர்ஜி ஆகிவிடுகிறது.. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும், இந்து அமைப்பினர் செய்யும் செயல்பாடுகள் பரபரப்பை உண்டுபண்ணிவிடும்.

காதல் ஜோடி: பெரும்பாலான வடமாநிலங்களில் ஆண் நாய், பெண் நாய் இரண்டையும் குளிக்க வைத்து, அழகுபடுத்தி, மாலை அணிவித்து, ஊர்வலமாக கொண்டு வந்து மந்திரங்கள் முழங்க கல்யாணம் நடத்தி வைப்பார்கள்..
நம்ம ஊரில், இந்து முன்னணி சார்பில், சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கழுதைக்கும், நாய்களுக்கும் கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.. நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.. இந்த கல்யாணத்தை செய்துமுடித்துவிட்டு, காதலர் தினத்துக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்படுகிறது.
காதலர் தினம்: காதல் என்ற பெயரில் பெரும்பாலும், இளம் பெண்களிடம் அத்துமீறல் மற்றும் பாலியல் வன்கொடுமை நடப்பதாக, இந்து முன்னணி தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.. குறிப்பாக கலாச்சார சீரழிவு நடப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள். பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்பதே இவர்களின் வாதமாக உள்ளது.
எனவேதான், காதலர் தினத்தன்று பொது இடங்களுக்கு வரும் காதலர்களுக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்தவகையில், காதலர் தினமான இன்று கோயிலுக்கு வரும் காதலர்களுக்கு தாலி கட்டும் போராட்டத்தை இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர்..
அறிவிப்பு: முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகியிருந்ததால், போலீசாரும் அலர்ட் ஆனார்கள்.. எனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுவிட்டது. முக்கியமாக காதலர்கள் ஒன்றுகூடும் கடற்கரைகள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலுமே போலீசார் குவிக்கப்பட்டனர்.
அந்தவகையில், தஞ்சையில் உள்ள பிரசித்தி பெற்ற பெருவுடையார் கோயிலுக்கு இன்று ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தரக்கூடும் என்பதாலும், காதலர் தினம் என்பதால், நிறைய காதல் ஜோடிகளும் வரக்கூடும் என்பதாலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எதிர்பார்த்தபடியே, கோயிலுக்கு காதல் ஜோடிகள் வர துவங்கினார்கள்.. அந்த காதல் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் கையில் தாலியுடன் காத்திருந்தனர்.
அலறி ஓட்டம்: தாலியுடன் நின்றிருந்தவர்களை பார்த்ததுமே, காதல் ஜோடிகளும் தலைதெறித்து ஓடினார்கள்.. ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தாலியுடன் வந்தவர்களை, தடுத்தனர்.. அங்கு நிற்கக்கூடாது என்று எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.. அதேபோல, எதற்காக அவர்கள் தாலியுடன் நிற்கிறார்கள் என்ற விவரம் தெரியாமல் பீதியுடன் வந்த காதல் ஜோடிகளுக்கு, போலீஸார் அறிவுரை கூறிய திருப்பி அனுப்பி வைத்தனர்... இதனால் பெரிய கோயில் பகுதியே பரபரப்பாகிவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications