பொதுத்தேர்வு அனுமதி..மாணவர்களுக்கு 75% வருகை பதிவேடு நிச்சயம் தேவை.. அன்பில் மகேஷ் விளக்கம்!
75% வருகை பதிவேடு கொண்ட மாணவர்களுக்கே பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: பள்ளிகளுக்கு 75 சதவிகிதம் வருகைப் பதிவேடு வைத்துள்ள மாணவர்களுக்கே பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், கொரோனா காலத்தில் ஆல் பாஸ் செய்யப்பட்டவர்கள் என்பதால், பயத்துடன் உள்ள மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்பதற்காக நடப்பாண்டில் குறைந்த வருகை பதிவேடு கொண்ட மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்படுவதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்வுக்கு வராத மாணவர்கள்
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணத்தை அறியவும், தேர்வு எழுதாத மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி இருந்தார்.

வருகை பதிவேடு விதிமுறை
இதனிடையே பள்ளிகளுக்கு சில நாட்கள் வந்த மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகை பதிவேடு விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியது. இதனால் பள்ளிகளில் 75 சதவிகிதம் வருகை பதிவேடு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி என்ற விதிமுறை தளர்த்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது.

அன்பில் மகேஷ் விளக்கம்
அன்பில் மகேஷ் விளக்கம்இந்த நிலையில் தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இப்போது பிளஸ் 2 எழுதும் மாணவர்கள் அனைவரும் கொரோனா பரவலால் 10ம் வகுப்பில் ஆல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள். அவர்களுக்கு பயம் இருக்கக் கூடாது. இந்த இரு ஆண்டுகளில் மாணவர்களின் பெற்றோர் பொருளாதார வாழ்வாதார ரீதியில் பாதிக்கபட்டிருக்கலாம். அல்லது மாணவர்களே மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் சிறப்பு ஆண்டாக, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.

75% வருகை பதிவேடு அவசியம்
இது ஒவ்வொரு ஆண்டும் நடக்காது. அப்படி விதிமுறைகள் மாற்றப்பட்டால், மாணவர்கள் பள்ளிகளுக்கு வர மாட்டார்கள். இனி 75 சதவிகிதம் வருகை பதிவேடு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில் வரும் கல்வியாண்டில் எந்த மாற்றமும் இருக்காது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும். கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. ஆனால் துணைத்தேர்வில் அவர்களோடு சேர்த்து தோல்வியடைந்த மாணவர்களையும் சேர்த்து 51 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதாத மாணவர்கள்
வழக்கமாக தேர்வு முடிவடைந்த பின்னரே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். ஆனால் மொழிப்பாடத்திற்கே 50 ஆயிரம் மாணவர்கள் வராததால், உடனடியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் தேர்வு நாளன்றே தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, பெற்றோரிடம் தொடர்புகொள்ள அறிவுறுத்தியுள்ளோம். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி, தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். இதற்கு பெற்றோரும் உதவியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications