அசத்துதே அரசு கேபிள்.. பாக்கெட்டை பதம் பார்க்கும் தனியார் கேபிள்கள்! ரூட்டை மாற்றும் வாடிக்கையாளர்கள்
தஞ்சாவூர்: தனியார் கேபிள் நிறுவனங்களுக்கு போட்டியாக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மானிய விலையில் எச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து பல தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் நிறுவனத்திற்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதால் வாடிக்கையாளர்களும் அரசு கேபிள் டிவியை நோக்கி வருகை தருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பல தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் டிடிஎச் சேவையிலும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் களத்தில் உள்ளது. இந்த நிலையில் அதிகமான கட்டணம் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகவும் அவதி அடைந்த நிலையில் கலைஞர் தலைமையிலான ஆட்சி காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடு கேபிள்டிவி ஆப்பரேட்டர்களின் பல ஆண்டுகால கோரிக்கையான கேபிள் வாரியத்தை அமைத்து கொடுத்து அதற்கு முதல் வாரிய தலைவராக இத்தொழிலில் அனுபவம் வாய்ந்த தஞ்சை ஜீவா என்பவரை நியமித்தார்.

அதன் பின்னர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் பல்வேறு சீர்திருத்தங்களையும் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து மேம்படுத்தியதோடு, அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் 8 ஆண்டு கால கோரிக்கையான எச்டி உயர்வரையரை செட்டாப்பாக்ஸ், தடையில்லாத சிக்னல் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு நிகராக உள்ளூர் சேனல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இதனையடுத்து அரசு கேபிள் டிவியிலிருந்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி தனியார் நிறுவனத்திற்கு சென்ற ஆப்பரேட்டர்கள் மீண்டும் அரசு கேபிள்டிவியில் இணைந்து கேபிள்டிவி சேவையை பெற்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
பல்வேறு காரணங்களால் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த அரசு கேபிள் டிவி நிறுவனமானது கடந்த ஆண்டு 12 லட்சம் இணைப்புகளாக குறைந்தன. உடனடியாக இணைப்புகளை உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை செய்தது. அதன் பின்னர் கேபிள்டிவி வாரிய தலைவராக தஞ்சை ஜீவா மற்றும் அரசு கேபிள்டிவி மேலாண்மை இயக்குனராக கூடுதல் பொறுப்பாக செய்தித் துறை இயக்குனரான வைத்தியநாதன் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது. அதன் பின்னர் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களையும் அரசு கேபிள்டிவி மாவட்ட அலுவலர்களையும் சந்தித்து அரசு கேபிள் டிவியுடன் இணைய வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் சில தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் இணைப்புகளுக்கு அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாலும் அரசு கேபிள் நோக்கி வரும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 14.80 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தனியாருக்கு போட்டி அளிக்கும் வகையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் மோசமாக வைத்து விட்டு சென்றார்கள் என்று 2024 சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். அதனை மாற்றியமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அரசு கேபிள் டிவி எச்டி தரத்துக்கு மாற 50 லட்சம் எச்டி செட்டாப் பாக்ஸ்களை வழங்க டெண்டர் விடப்பட்டு புதிய எச்டி பாக்ஸ்களை கேபிள்டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஆப்பரேட்டர்களுக்கு உடனடி கடன் வழங்கப்படுகிறது. அதன்படி 25 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க 2 லட்சம் ரூபாய் வீதம் 500 கோடி வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் ஆபரேட்டர்களுக்கான வங்கிக்கடனை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. அப்போது வங்கி கடன் மூலம் புதிய எச்டி செட்டாப்பாக்ஸ் பெற்ற ஆபரேட்டர்கள், தனியார் நிறுவனத்திலிருந்து தங்களது இணைப்புகளை அரசு கேபிள்டிவிக்கு மாற்றியதாகவும், தற்போது அரசு கேபிள்டிவி நிறுவனம் சிறப்பாக செயல்படுவதாகவும், ஆபரேட்டர்கள் எதிர்பார்த்ததைவிட வாரியத்தை அமைத்து தந்தது, புதிய எச்டி பாக்ஸ் வழங்கியது, தேவையான உள்ளூர் சேனல் மற்றும் தடையில்லாத ஒளிபரப்பு அத்துடன் வங்கிகடன் உதவி ஆகியவற்றை செய்து கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், துறையின் அமைச்சர், வாரிய தலைவர், அரசு கேபிள்டிவி மேலாண்மை இயக்குனர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications