Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை திருவிழா கோர விபத்து! அரசியலாக்க சிலர் முயற்சி! அரசியல் செய்ய விரும்பவில்லை -முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்ய நினைப்பதாகவும் அவர்களுக்கு பதில் சொல்லவும் அரசியல் செய்யவும் விரும்பவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Recommended Video

    தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி... இறந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர்!

    தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

    இதன்படி 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது.

    தஞ்சை தேர் விபத்து

    தஞ்சை தேர் விபத்து

    தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

    முதல்வர் ஆறுதல்

    முதல்வர் ஆறுதல்

    இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். ‌

    மீட்பு மற்றும் நிவாரண பணிகள்

    மீட்பு மற்றும் நிவாரண பணிகள்

    தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண தொகையை வழங்கினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மருத்துவரிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்," விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பார்வையிட அனுப்பி வைத்தேன்.

    அரசியலாக்க முயற்சி

    அரசியலாக்க முயற்சி

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகைகள் வழங்கியதோடு அரசின் சார்பில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளேன் . படுகாயமடைந்த மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். தேர் திருவிழாவில் உயிரிழந்த மக்களை வைத்து சிலர் இந்த சோக நிகழ்வை அரசியலாக்க விரும்புகின்றனர் . அது போன்றவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவும் விரும்பவில்லை. மக்களுக்கு துன்பம் ஏற்படாமல் தடுப்பது தான் இந்த அரசின் நோக்கம். மக்கள் துயரத்தில் இருக்கும்போது அதில் பங்கு கொண்டு அரசு இருக்க வேண்டும் என்பதே என் இலக்கு. அதனை நோக்கியே பயணிக்கும் என்பதை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும் விபத்து நடந்தது எவ்வாறு என்பது குறித்து ஆய்வு நடக்கிறது", என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+