ஞாபகம் இருக்கா ஸ்ரீபவித்ராவை.. கிலோ கணக்கில் நகை.. லிப்ஸ்டிக், ஹை ஹீல்ஸ், கதிகலங்கிய பட்டுக்கோட்டை
உடம்பெல்லாம் நகைகளுடன் அருள் வாக்கு சொன்ன பெண் சாமியார்
தஞ்சை: மாடர்ன் டிரஸ் பெண் சாமியார் ஸ்ரீபவித்ராவை ஞாபகம் இருக்கா? அவர் இப்போது மறுபடியும் லைம்லைட்டில் வந்துள்ளார். தஞ்சாவூர் முழுக்க இவரை பற்றின பேச்சாகவே இருக்கிறது.
தஞ்சை பகுதியில் படுபேமஸ் ஆன பெண் சாமியார் ஸ்ரீபவித்ரா.. கழுத்து நிறைய நகைகள் தொங்கும்.. ஆளுயுர மாலை அணிந்து கொள்வார்.. இப்படியேதான் ஊருக்குள் நடமாடுவார்.
ஒரத்தநாடு அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா... திண்டுக்கல் மாவட்டத்தில் காளிக்கு கோயில் கட்டி வருகிறார்.. அடிக்கடி பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.. திடீர் திடீர் என அருள் வழங்குவார்.

சிவலிங்கம்
"ஸ்ரீ பவித்ரா காளி மாதா" என்ற பெயரில்தான் அருள் வழங்குவார்.. தஞ்சையின் சுற்றுவட்டார மக்கள் பெண் சாமியாரை தேடி சென்று அருள் பெற்று கொள்வார்கள்.. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, பெண் சாமியார் கமிஷனர் ஆபீசர் வந்திருந்தார்.. சில்வர் கலரில் சுடிதார் அணிந்து கொண்டு, கழுத்தில் சிவலிங்கத்தை கற்களால் பதித்த டாலர் செயின், காசு மாலைகளுடன் கமிஷனர் ஆபீசில் நுழைந்த பவித்ராவை பார்த்ததும் அங்கிருந்தோர் சற்று மிரண்டே விட்டனர்..

பெண் சாமியார் பெண் சாமியார்
டிஐஜி பிரவேஷ்குமாரை சென்று நேரில் சந்தித்துவிட்டு பிறகு வெளியே வந்த பெண் சாமியார், செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் அகில இந்திய இந்து யுவமோட்சா தர்மாச்சாரியா என்ற பட்டம் பெற்றிருக்கிறேன்... பெண்கள் சுமங்கலிகளாக இருக்கவும், பொதுமக்கள் கஷ்டம், சோதனை நீங்கி சுபிட்சத்துடன் இருக்கவும், விவசாயம் செழிப்பதற்காகவும் பொதுமக்களை சந்தித்து ஆசி வழங்க உள்ளேன். அதனை பெரிய கோயில் அமைந்துள்ள தஞ்சை மண்ணிலிருந்து தொடங்க உள்ளேன்..

எல்லை தெய்வம்
ஆசி கொடுப்பதற்கு முன்பு, நம் எல்லைதெய்வமும், காவல் தெய்வமுமான போலீஸ் அதிகாரியான டிஐஜி பிரவேஷ் குமார் சாரை சந்தித்து ஆசி வழங்கினேன். காவல்துறை அதிகாரியாக அவரை நான் சந்திக்கவில்லை. எல்லை தெய்வமாக நெனச்சு சந்தித்து எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினேன். எனக்கு மத வேறுபாடு கிடையாது. 3 மதங்களுக்கும் கோயில்களை எழுப்புவேன். காளி எங்கிட்ட என்ன சொல்றாளோ, அதை நான் மக்கள் கிட்ட ஆசியாக சொல்லுவேன்" என்றார்.

பரபரப்பு
இப்போதும் ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளார் ஸ்ரீபவித்ரா.. பட்டுக்கோட்டை பாளையம் செம்பிரான்குளம்தென் கரையில் உள்ள ஸ்ரீ அக்னி காளியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது... கலந்து கொண்ட பவித்ரா, கிலோ கணக்கில் ஆளுயர நகைகள் அணிந்து கொண்டு வந்துள்ளார்.. உதட்டில் லிப்ஸ்ட்டிக் காணப்பட்டது.. தலைக்கு பிரவுன் கலரில் ஹேர்கலரிங் செய்திருந்தார்.. வழக்கமாக பெண் சாமியார்கள் என்றால், காவி நிறம் அல்லது சிவப்பு, மஞ்சள் நிற சேலைகளில் எளிமையாக ஆசி தந்து வரும் நிலையில், ஸ்ரீபவித்ராவின் மார்டன் டிரஸ்ஸூம், ஹை ஹீல்சும் பக்தர்கள் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது..

பூஜைகள்
முன்னதாக பட்டுக்கோட்டை கோட்டை சிவன் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட தீர்த்தங்களை ஊர்வலமாக எடுத்துச் என்று பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அக்னி காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெண் சாமியாரிடம் சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசியைப் பெற்று கொண்டனர்.












Click it and Unblock the Notifications