அம்மிக்கல்லில் முடிந்த அகிலா வாழ்க்கை.. எப்ப பார்த்தாலும் செல்போன்? தஞ்சாவூரில் நடந்ததை பாருங்க
தஞ்சாவூர்: தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் மற்றும் சந்தேகத்தால் ஏற்படும் கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆவேசத்தில் வாழ்க்கைத் துணையை கொலை செய்யும் பெற்றோர், தங்கள் பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காதது வேதனையளிக்கிறது... நேற்று தஞ்சையில் நடந்த கொடுமையை பாருங்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குஞ்சுக்கிரி பாளையத்தைச் சேர்ந்த பெயிண்டர் கார்த்திக், மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்.

இவருக்கும் ரூபா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். ரூபா எப்போதும் செல்போனும் கையுமாக இருந்ததும், கணவர் மற்றும் பிள்ளைகளை சரியாகக் கவனிக்காமல் இருந்ததும் கார்த்திக்கு கடும் சந்தேகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. பலமுறை எச்சரித்தும் ரூபா கேட்கவில்லையாம்..
எப்போதும் செல்போன்
சம்பவத்தன்று கார்த்திக் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது ரூபா செல்போனில் மும்முரமாக இருந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக், ரூபாவின் கழுத்தை நெரித்து, வீட்டில் இருந்த கத்தியால் அவரைச் சரமாரியாக குத்திவிட்டார்.. இதில் ரத்த வெள்ளத்தில் ரூபா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்..
ரூபா உயிரிழந்ததை உறுதி செய்த கார்த்திக், அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம், இப்போது கார்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.
ஆனாலும், நேற்றைய தினம் இந்தத் தீர்ப்பு வந்த நாளியே தஞ்சாவூரில் மற்றொரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் அருகே சந்தேகத்தின் காரணமாக ஒரு கணவர் தனது மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இங்கும் சந்தேகமே பிரதான காரணமாக இருந்துள்ளது.
தீராத சந்தேகம்
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளை அடுத்த அணைக்கரை மீன் மார்க்கெட் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (38 வயது).. இவரது மனைவி அகிலா (28 வயது).. இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது.. இவர்களுக்கு 7 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தையும், 2 வயதில் ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.. கணவன் மனைவி இருவரும் கூலிவேலை செய்து வந்தனர்..
கடந்த சில நாட்களாக அகிலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அன்பரசன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.. நேற்றுமுன்தினம் இரவும் வழக்கம்போல் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.. பிறகு 2 பேரும் தூங்க சென்று விட்டனர்..
அம்மிக்கல் - பாவம் அகிலா
ஆனாலும், அன்பரசன் மனதில் ஏதோ உறுத்தி கொண்டேயிருந்தது.. பிறகு திடீரென எழுந்த அன்பரசன், தூங்கிக் கொண்டிருந்த அகிலாவின் தலையில் குழவிக்கல்லை தூக்கி போட்டுவிட்டார்.. இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே அகிலா பரிதாபமாக இறந்தார்..
இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அகிலாவின் உடலை மீட்டு போஸ்ட் மாரட்டம் செய்ய கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்பரசனை கைது செய்தனர்..
குடும்ப உறவுகள் - நம்பிக்கையின்மை
குடும்ப உறவுகளுக்குள் புகுந்த செல்போன் மோகமும், பரஸ்பர நம்பிக்கையின்மையும் இத்தகைய உயிர்ப்பலிகளுக்குக் காரணமாகின்றன. ஒருபுறம் சட்டம் தனது கடமையை செய்தாலும், மறுபுறம் பிஞ்சு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவிக்கும் அவலம் தொடர்கிறது.
இத்தகைய வன்முறைகளை தடுக்க சமூக ரீதியான விழிப்புணர்வும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மையும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமாகிறது..,!!!












Click it and Unblock the Notifications