தஞ்சை பெரிய கோவிலில் மாட்டிக்கொண்ட இந்திரா.. ஆடிப்போன ஊழியர்கள்.. சிக்கியது எப்படி?
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் இருக்கின்றன. இந்த சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல் இருக்கின்றன. இந்த உண்டியல்களில் பக்தர்கள் போடும் காணிக்கைகளை எண்ணும் போது, பெண் ஒருவர், யாரும் பார்க்காத வகையில் ரூ.500, ரூ.200, ரூ.100 என ஒவ்வொன்றாக பணத்தை லாவகமான முறையில் எடுத்து தனது மடியில் ஒளித்து வைத்தார். அவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய இந்து கோயில்களின் பட்டியலில் உள்ள தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோயிலாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக இருக்கிறது. இந்த விமானத்திற்குக் கீழே 11 அடி கனமான சுற்றுச்சுவருடன் கருவறை அமைந்திருக்கிறது.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவிலை பொறுத்தவரை பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம் ஆகும்.
உண்டியல் எண்ணும் பணி
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெரியநாயகி அம்மன் சன்னதியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் உண்டியல் பணம் எண்ணும் பணியை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
நைசாக திருடினார்
கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணி மும்முரமாக நடந்து கொண்டு இருந்த நிலையில் அந்த பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், யாருக்கும் தெரியாமல் நைசாக ரூ.500, ரூ.200, ரூ.100 என ஒவ்வொன்றாக பணத்தை லாவகமான முறையில் எடுத்து தனது மடியில் ஒளித்து வைத்து கொண்டிருந்தார். பின்னர் தான் எவ்வளவு பணம் திருடியுள்ளோம் என்று பார்க்க ஆசைப்பட்ட அந்த பெண், பணத்தை எண்ணுவதற்காக மறைவான இடத்தை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது சில ரூபாய் நோட்டுகள் கீழே சிதறி விழுந்திருக்கிறது. அதைப்பார்த்த கோவில் ஊழியர் வீரமணி, அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கைதான இந்திரா
போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை திருடிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த போஸ் என்பவரின் மனைவி இந்திரா (வயது 60) என்பதும், உண்டியல் காணிக்கை ரூ.25 ஆயிரத்து 780-ஐ அவர் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. பணம் எண்ணும் பணியில் தன்னார்வலராக சேர்ந்த இந்திரா, முதல் முறையாக பெரியகோவிலில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து தஞ்சை அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் சத்யராஜ் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications