யார் பெற்ற மகனோ..மக்கள் மனதில் நீங்கா இடம்.. விடைபெற்ற தஞ்சை கலெக்டர்... ஒரே நாளில் செய்த சாதனை
: கலெக்டர்ன்னா இவருதான்.. இரண்டு வருசம் தான் தஞ்சை கலெக்டராக இருந்தார். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். இரண்டு வருடங்களில் பல விஷயங்களை செய்துள்ள கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இரண்டு முறை ஒரே நாளில் 1,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அரசியல்வாதிகளை போல் கலெக்டர்களும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஒரு கலெக்டர் டிரான்ஸ்பர் ஆகி போகும் போது அந்த மாவட்ட மக்களே வருத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. தேனியில் கலெக்டராக ராஜேந்திரன் என்பவர் இருந்தார்.

இவர் போடிமெட்டு மக்களுக்கு பட்டா உள்பட பல விஷயங்கள் செய்து கொடுத்தார். அந்த மக்கள் அவரது நினைவாக கலெக்டர் ராஜேந்திரன் நகர் என்றே ஒரு ஏரியாவிற்கு பெயர் வைத்துள்ளனர். இன்றும் போடி மெட்டுக்கு போனால் அந்த போர்டை பார்க்கலாம், மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால் அவர் பெரிதும் பாராட்டப்பட்டார். இதேபோல் தமிழ்நாட்டில் பல ஆட்சி தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவ்வப்போது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
அதுபோல் தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில், இரண்டு முறை ஒரே நாளில் 1,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளார். இவரது சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட கலெக்டராக கடந்த இரண்டு வருசத்திற்கு முன்பு பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல விஷயங்கள் செய்தார். ஏழை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி , செங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியும், அதில் வீடு கட்டி, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து, அதற்கு செந்தமிழ் நகர் என பெயர்சூட்டி அவர்களுக்கு வீடுகளை வழங்கி உள்ளார் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ். அதுமட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தில் நஞ்சையில் உளுந்து என்ற சிறப்பான திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதிகபட்ச உளுந்து சாகுபடிக்கு வழிவகை செய்தார்.
அத்துடன் தஞ்சாவூர் அருங்காட்சியகம், ராஜாளி பறவைகள் பூங்கா, 7டி திரையரங்கம், சமுத்திரம் ஏரி என தஞ்சையில் சுற்றுலாவை வளர்க்க தனி கவனமும் செலுத்தி வந்தார். இறுதியாக பணி மாறுதல் அறிவிக்கப்பட்ட பின்னர், ஏழை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு முறை, ஒரே நாளில் தலா 1,000 பட்டாக்களை வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தஞ்சை கலெக்டரின் சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்,
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications