கும்பகோணம் சூர்யகலாவை பாத்தீங்களா? 55 வயசில் கேடுகெட்ட செயல்.. அது யாரு பக்கத்துல? தஞ்சாவூர் திணறுது
தஞ்சாவூர்: யாரிந்த 55 வயது பெண்... தஞ்சாவூர் மட்டுமல்ல, தமிழகமே இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம், சோழன்மாளிகை பகுதியை சேர்ந்தவர் வீரசோழன். இவரது மனைவி சூர்யகலா.. 55 வயதாகிறது.. கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி பகுதியில் முதியோர் இல்ல காப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார் சூர்யகலா.

இந்த காப்பகத்தில், ஏராளமான முதியோர்கள் வசித்து வருகிறார்கள்.. இவர்களுக்கு, காலை நேரத்தில், தினமும் ஒரு பெண் சாப்பாடு தந்துவிட்டு போவாராம். வழக்கமாக இவர்தான் காலை டிபனை கொண்டு வந்து தந்திருக்கிறார். ஆனால், சமீபகாலமாக, தன்னுடைய மகனிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
களைப்பு : அந்த மகன் 10ம் வகுப்பு படிக்கிறார்.. 15 வயதாகிறது. சிறுவன், தினமும் டிபன் கொண்டுபோய் தந்துவிட்டு வரும்நிலையில், நாளுக்கு நாள் சிறுவனின் உடல்நிலையும் பலவீனமாகி கொண்டே வந்திருக்கிறது. எந்நேரமும் சோர்வாகவும், களைப்பாகவும் காணப்பட்டதுடன், ஒருவித பயத்துடனும் இருந்ததாக சொல்கிறார்கள்.
இதனால், பதறிப்போன பெற்றோர், மகனிடம் என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது சிறுவன், தன்னிடம் சூர்யகலா, தினமும் தவறாக நடந்து கொண்ட அக்கிரமத்தை சொல்லி கதறி அழுதுள்ளார்.
நிரூபணம்: இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சுவாமிமலை போலீசுக்கும், மகளிர் போலீசுக்கும் சென்று புகார் தந்தனர். இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டதில், சிறுவனை அந்த பெண் சீரழித்தது உண்மை என்று நிரூபணமாகியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, சூர்யகலாவுக்கு முருகன் என்ற நண்பர் இருக்கிறார். அவருக்கு 52 வயதாகிறது. கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரதெருவை சேர்ந்தவர் இந்த முருகன். 15 வயதான சிறுவனுக்கு, சூர்யகலா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததற்கு, இந்த முருகன்தான் உடந்தையாக இருந்திருக்கிறார். 15 வயது சிறுவனை நாசமாக்கிய 55 வயது பெண் சூர்யகலாவும், அதற்கு காரணமான அவரது ஆண் நண்பரும் ஜெயிலில் உள்ளார்கள்.
போக்சோ: பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருவோர்கள், போக்சோவில் கைதாகி வரும்நிலையில், நம்முடைய தமிழ்நாட்டில், பெண்களே இப்படி போக்சோவில் கைதாகி வருவது கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், மருத்துவ சிகிச்சையும் சிறுவனுக்கு நடந்து கொண்டிருக்கிறது..
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications