Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டுக்கோட்டை வசந்தியை பாத்தீங்களா? 6வது கர்ப்பம்.. தஞ்சாவூர் திணறுது.. அதென்ன பாத்ரூம் பக்கெட்டில்?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை பெண்ணின் பரிதாபத்தை நினைத்து, ஒட்டுமொத்த மக்களும் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. என்ன நடந்தது வசந்திக்கு? இன்று தொழில் நுட்பங்கள் அபரிமிதமாக வளர்ந்துவிட்டன.. அதனால்தான், சமையல், கோலம் உட்பட பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் வீடியோக்களை பார்த்து பொதுமக்கள் தெரிந்து கொள்கின்றனர்... அதற்காக எல்லாவற்றையுமே வீடியோக்கள் மூலம் கற்க முடியாது.. பின்பற்றவும் முடியாது.

அப்படிப்பட்ட ஒன்றுதான் பிரசவம்.. டாக்டர்கள் மட்டுமே இதை அறிய முடியும்.. தாய்க்கும் சேய்க்கும் எந்தவித ஆபத்துமில்லாமல், டாக்டர்கள் மட்டுமே காப்பாற்ற முடியும்.. 2 ஜீவன்களையும் பாதுகாக்க முடியும்..

Thanjavur incident and why did Pattukkottai Woman take this sudden decision

உயிரிழப்புகள்: ஆனால், முறைதவறின உறவால், கர்ப்பமாகும் பெண்கள் சிலர், இணையத்தில் வீடியோவை பார்த்து, தங்களுக்கு தாங்களே பிரசவம் செய்து கொள்கிறார்கள்.. அல்லது காதலிக்கு, சம்பந்தப்பட்ட காதலனே பிரசவம் பார்க்கும் விபரீதமும், அதனால் உயிரிழப்புகளும் பெருகி வருகின்றன. இதோ, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலும் ஒரு துயரம் நடந்துள்ளது.. ஆனால், இது முறையற்ற உறவால் விளைந்த கர்ப்பம் இல்லை என்பதுதான் அதிர்ச்சி தகவல்.

இங்குள்ள சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்... இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் வசந்தி.. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இந்நிலையில், வசந்தி 6வது முறையாக கர்ப்பம் தரித்தார்.

5 குழந்தைகள்: ஏற்கெனவே 5 குழந்தைகள் இருக்கின்ற நிலையில், 6வது குழந்தையா? என்று அதிர்ந்தார்.. கணவரின் வருமானம் போதாமல், குடும்பமே வறுமையில் உள்ளதால், இன்னொரு குழந்தையை பெற்றுக்கொண்டு, காலமெல்லாம் வளர்ப்பது கடினம் என்றும் கலங்கினார். அதற்காகவே இந்த பகீர் முடிவை எடுத்தார்.

இன்று அதிகாலை வசந்திக்கு பிரசவ வலி வந்துள்ளது ஆனால், ஆஸ்பத்திரிக்கு போகவில்லை.. வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டார்.. குழந்தையும் நல்லவிதமாக பிறந்துவிட்டது. ஆனால், அடுத்த செகண்டே, உயிருடன் பிறந்த அந்த குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றார்.. பிறகு, அதன் வாயில், பெரிய துணியை எடுத்தும் மூடி அடைத்ததாக கூறப்படுகிறது.

அதிக ரத்தப்போக்கு: அந்த குழந்தை அப்போதே இறந்துவிட்டது.. அடுத்த சில நிமிடங்களில், பிரசவமான வசந்திக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.. சிறிது நேரத்தில் ரத்தப்போக்கு நின்றுவிடும் என்று நினைத்தார். ஆனால், நேரம் ஆக ஆக, ரத்தப்போக்கும் அதிகரித்தபடியே இருந்தது.. இதனால் தன்னுடைய வீட்டை விட்டு எழுந்து சென்று, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம், தனக்கு மயக்கம் வருவதாக வசந்தி சொல்லி உள்ளார்..

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியே வீட்டுக்குள் வந்து பார்த்தார்கள்.. அங்கே, ரூம் முழுக்க ரத்தமாய் கிடப்பதையும், அதே ரூமில், ஒரு பக்கெட்டில் குழந்தை பிணமாக வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து அலறினார்கள். பிறகு, உடனடியாக வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்..

Thanjavur incident and why did Pattukkottai Woman take this sudden decision

வழக்கு பதிவு: ஆனால், வசந்தியின் உயிர் வழியிலேயே பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. இதற்கு பிறகு, பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், வறுமையின் காரணமாக 6வது குழந்தைக்கு தாயான நிலையில், தனக்குத்தானே பிரசவம் பார்த்து, அந்த குழந்தையை கொன்று, தானும் உயிரை விட்ட இந்த பெண்ணின் செயல், பட்டுக்கோட்டையையே பதற வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+